ஆனா எல்லா நேரமும் உங்களுக்கு அந்த நேரம் இருக்கும்னு சொல்லிட முடியாது. சில சூழ்நிலைகள்ல நிமிஷங்கள் மட்டுமே உங்ககிட்ட இருக்கும். அந்த மாதிரி நேரத்துல நீங்க ரெஸ்யூம்ல சுலபமா மாற்றங்கள் செய்ய நாங்க ஒரு பட்டியல் போட்டுருக்கோம். இந்த கட்டுரைல அதான் பாக்க போறீங்க. எவளோ நேரம் உங்களுக்கு இருக்குன்னு தெரிஞ்சுட்டு, உங்க ரெஸ்யூம டக்கரா மாத்த தயார் ஆகுங்க.
ஃபான்ட் மாற்றவும் :
உங்களுக்கு புடிச்ச ஃபான்ட்ட ரெஸ்யூம்ல போடறது முக்கியம் இல்ல. அத படிக்கறவங்களுக்கு பளிச்சுனு புரியற மாதிரி இருக்கணும். கிழிஞ்சு போன பழைய ஜீன்ஸ் மாதிரி இல்லாம கொஞ்சம் கண்ணுக்கு வேலை வெக்காம இருக்கற ஃபான்ட்டா இருந்தா நல்லது. படிக்கவே முடியலைன்னா வேலை கிடைக்க வாய்ப்பே இல்ல.
பரம்பரை பரம்பரையா எல்லா ரெஸ்யூம்லையும் இந்த ஆப்ஜெக்ட்டிவ்னு ஒரு 10 வரி இருக்கும்.
என்னோட குறிக்கோள் இது,
நான் இந்த வேலைய ஏன் விரும்பறேன்,
வேலைல எப்பிடி இருப்பேன்..
இப்படிலாம் எந்த விஷயமும் அவசியமே இல்ல இந்த காலத்துல. தூக்கிடுங்க
"ஸ்பெல்லிங்" முக்கியம் அமைச்சரே :
என்ன செலவானாலும் பரவால்ல எழுத்துப்பிழை இல்லாம ரெஸ்யூம தயார் செய்யுங்க. ஏன்னா இதைக்கூட பாக்கல அப்பறம் வேலைய எப்பிடி ஒழுங்கா செய்வான்/செய்வாள்னு ஒரு கருத்து மனசுல உருவாகிடும். பார்மேட் கவனிக்கணும் :
எந்த ஃபார்மேட்ல அனுப்ப சொல்லி இருக்காங்களோ அதுல அனுப்பறது தான் சரி. முடிஞ்சா பீ.டீ.எப்ல அனுப்புங்க. தகவல் மாறாம இருக்கும். ஒருவேளை கிரியேட்டிவ் ஃபீல்ட் சேர்ந்தவரா இருந்தா.. ஃபோட்டோஷாப்ல அட்டகாசமா ஒரு ரெஸ்யூம் டிசைன் பண்ணிக் கூட அனுப்பலாம். இதுவே உங்கள கொஞ்சம் உயர்த்தித் தனித்துவமா காட்ட உதவும்.
உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பேரு, உங்க பேரு தான? அப்போ அதையே ரெஸ்யூமுக்கும் வைங்க. உங்க பேர போட்டு பின்னாடி ரெஸ்யூம்னு எழுதுங்க. அப்போதான் கூட்டத்துல தொலைஞ்சு போகாம இருக்கும்.
உங்க "லிங்க்ட் இன்" பக்கத்தோட முகவரியை இதுல எழுதி வைங்க :
உங்க முகவரிய தூக்கிட்டு அங்க உங்க லிங்க்ட் இன் பக்கத்தோட சுட்டிய (யூஆர்எல்) குடுத்து வைங்க. முடிஞ்சா ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களோட சுட்டியும் குடுங்க. என்ன ஆனாலும் சரி, உங்க பேஸ்புக் முகவரி வேண்டாம். சில நேரத்துல கிடைக்கற வேலை கூட கிடைக்காம போய்டும். அப்பறம் "லிங்க்ட் இன்" கொஞ்சம் நல்ல படியா பராமரிக்கறது முக்கியம். அதே போல உங்களுக்குன்னு ஒரு யூஆர்எல் உருவாக்கி அத ரெஸ்யூம்ல போடுங்க.
கல்லூரி முடித்த ஆண்டு அவசியம் இல்லை :
நீங்க படிச்சுருக்கீங்களா, என்ன படிச்சுருக்கீங்க அதான் நிறுவனத்துக்கு அவசியம். படிச்சு வெளில வந்த வருஷம் அவுங்களுக்கு அவசியம் இல்ல. ஏன்னா அத வெச்சு உங்க வயச கணக்கிட முடியும். அதனால வருஷத்த தூக்கிடுங்க. படிக்கற மாதிரி இருக்கணும் :
முன்னாடியே பான்ட் மாத்த சொல்லி இருந்தோம். அதோட இன்னொரு விஷயம் முக்கியம். ரெண்டு வரிகளுக்கு நடுவுல இருக்கற இடம். எல்லா தகவலையும் ரெண்டு பக்கத்துக்குள்ள முடிக்கணும்னு கசகசன்னு எழுதாம, முடிஞ்ச அளவுக்கு இடைவெளி விட்டு வரிகளை வைங்க.
இந்த வருஷம் தான் படிச்சு முடிச்சு வெளில வந்துருக்கேன்னு சொல்ற ஆள் நீங்கனா , பள்ளிக்கூட தகவல் ரெஸ்யூம்ல இருக்கலாம். இல்லைனா அத தூக்கிடறது நல்லது. திறமைகள் பகுதியை மேம்படுத்துங்க :
சமீபத்துல நீங்க வளத்துக்கிட்ட திறமைகள் இருந்தா அத சேர்த்துக்குங்க. அப்படி எதுவுமே இல்லைனா, விண்ணப்பிக்கற வேலைக்கு ஏத்த மாதிரி புதுசா தேவ படுகிற விஷயங்கள தெரிஞ்சுகிட்டு அத எழுதுங்க. முக்கியமா பழைய விஷயங்கள தூக்குங்க. மைக்ரோசாப்ட்ல வர்ட், எக்செல் பவர்பாய்ண்ட் இதுங்கள குழந்தைங்க கூட தெரிஞ்சு வெச்சுருக்கு. அதனால அதுங்கள தூக்கிடறது நல்லது.
அதிகமான திறமைகள் இருந்த அத வகைப்படுத்துங்க :
பல மொழிகள் தெரியும், பல கணினி மொழிகளும் தெரியும், பல மென்பொருள் தெரியும்னா, ஒவ்வொன்னையும் தனித்தனியா வகைப்படுத்தறது நல்லது. அப்போ எந்த தகவலும் மனிதவள அதிகாரி கண்ணுல படாம தப்பிக்காது.
ஃபார்மேட்டிங் கவனிங்க :
ரெஸ்யூம் முழுக்க ஒரே ஃபார்மேட்ல இருக்கறது அவசியம். இங்க ஒன்னு அங்க ஒன்னுன்னு இல்லாம இருக்கணும். நீங்க உபயோகிக்கற புள்ளெட்ஸ் கூட ஒரே மாதிரி இருக்கறது நல்லது.
பல நிறுவனங்கள் "அப்ளிகன்ட் டிராக்கிங் சிஸ்டம்" உபயோகிக்கறாங்க. அதனால நீங்க முக்கியமான தகவல்களை சுருக்கமா எழுதி இருந்தா அந்த மென்பொருள் உங்கள கண்டுக்காது. அதனால முடிஞ்சா அளவுக்கு எல்லாத்தையும் விவரமா விரிவா எழுதுங்க.
பாத்த உடனே புரியனும். தேடக்கூடாது :
சில நேரங்கள்ல ரெஸ்யூம்ல பல விஷயங்கள் செத்துருப்பாங்க. என்ன இருக்கு அது எங்க இருக்குனு தேடி பாக்கறதுக்குள்ள அதிகாரிக்கு வயசாகிடும். அதனால வித்தியாசமான வடிவம், வித்தியாசமான வண்ணங்கள், இதுங்கள தவிர்க்கிறது நல்லது.
மொழி அவசியம் :
சாதாரணமா 2ஆம் வகுப்பு குழந்தைக்கு புரியற மாதிரி மொழி இருக்கும். அத முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் கெத்தா மாத்துங்க. நம்ம சசி தரூர் மாதிரி சில வார்த்தைகள் அங்க அங்க இருக்கறது நல்லது.
பதவிஉயர்வு சரியாய் குறிப்பிடுங்க :
ஒரே நிறுவனத்துல பல நிலைகள்ல வேலைசெய்திருந்தா, எல்லா பதவி உயர்வையும் சரியா குறிப்பிடுங்க.
வரலாறு இங்க முக்கியம் இல்ல :
அதிகமான அனுபவம் இருந்தா எல்லாத்தையும் நீங்க ரெஸ்யூம்ல குறிப்பிடனும்னு அவசியம் இல்ல. கடைசியா 10 இல்ல 15 வருஷத்தோட தகவல் இருந்தா நல்லது. அந்த மாதிரி வரலாறு எழுதி இருந்தா அந்த எடத்துல வேற ஏதாவது எழுதுங்க.
சத்தம் போட்டு படிச்சு பாத்தா தவறான வார்த்தைகள், சரியா அமையாத வரிகள், தகவல்கள் எல்லாமே சட்டுனு கவனத்துக்கு வரும். அதனால ஒரு தரம் சத்தம் போட்டு படிச்சுருங்க.
புல்லட் பாயிண்ட்ஸ் புல்லெட் சைஸ் :
சில பேர் புல்லட் பாயிண்ட்ஸ்ல மைல் நீளத்துக்கு தகவல் வெச்சிருப்பாங்க. அதே சமயம் அதிகமான பாயிண்ட்ஸ் இருக்கறதும் நல்லது இல்ல. எல்லா புல்லட் பாயிண்ட்ஸ்சும் புல்லட் சைஸ்ல இருந்தா நல்லது.
சோதித்து பார்க்கவும் :
உங்க ரெஸ்யூம உங்களுக்கு தெரியாத ஒருத்தர் கிட்ட குடுத்து படிச்சு பாக்க சொல்லுங்க. அவருக்கு புரியுதா புரியலையா? அவர் இப்படி ஒரு ரெஸ்யூம் பாத்தா என்ன செய்யவார் இப்பிடி பட்ட கேள்விகள் கேளுங்க. அவர் குடுக்கற பதில் வெச்சு உங்க ரெஸ்யூம மாத்தி அமையுங்க.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.