👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் "ரீசார்ஜ் ஏடிஎம்" என்னும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது என்பது தெரிந்ததே ஏடிஎம் இயந்திரம் வழியாக ரீசார்ஜ் செய்யும் ஒரு புதிய வழிமுறைக்கு OTP தேவைப்படாது. எப்படி ரீசார்ஜ் செய்ய வேண்டும்: * உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருகவும். * மெயின் மெனுவில் "ரீசார்ஜ்" எனும் விருப்பத்தை தட்டவும் அல்லது தேர்வு செய்யவும். * நீங்கள் "ரீசார்ஜ்" மெனுவிற்குள் வந்ததும், உங்கள் ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடவும். * உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்ட பிறகு, OK / ENTER பொத்தானை அழுத்தவும் * பின்னர் உங்கள் ஏடிஎம் பின் கோட்-ஐ உள்ளிடவும்.
* இப்போது, தேவையான இடத்திலல் குறிப்பிட்ட ரீசார்ஜ் தொகையை உள்ளிடவும். * பின்னர் ரீசார்ஜ் மதிப்பை உறுதிசெய்து என்டர்-ஐ அழுத்தவும் * ஏடிஎம் இயந்திரத்தின் ஸ்க்ரீன் இப்போது ரீசார்ஜ் செய்தியைக் காண்பிக்கும், அதனுடன் தொடர்புடைய தொகை உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதை தொடர்ந்து, உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் குறிப்பிட்ட ரீசார்ஜிற்கான உறுதிப்படுத்தல் மெசேஜைப் பெறுவீர்கள், இந்த புதிய ஜியோ ரீசார்ஜ் வழிமுறையானது AUF Bank, Axis Bank, DCB Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, IDFC Bank, Standard Chartered Bank மற்றும் State Bank of India ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம்களில் பயன்படுத்தி கொள்ளலாம்
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து ரீச்சார்ஜ் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பலரும் நீச்சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது ரீச்சார்ஜ் செய்ய கடைகளுக்கு செல்ல வேண்டியதில்லை.. எளிமையாக ரீச்சார்ஜ் செய்ய ஜியோ ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று அங்கேயே உங்கள் ஜியோ மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்யமுடியும். ஆக்சிஸ், டிபிசி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஐடிபிஐ, ஐடிஎஃப்சி எனப் பெரும்பாலான வங்கி ஏடிஎம் மையங்களில் ரீசார்ஜ் செய்ய முடியும்.
மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போலவே ஏடிஎம் கார்டை செருகி ரீசார்ஜ் ஆப்ஷனை தேர்வு செய்து வழிகாட்டலைப் பின்பற்றினால் போதுமானது.
1. உங்கள் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருக வேண்டும்.
2. அடுத்ததாக மெனுவில் இருந்து Recharge என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. உங்கள் JIO தொலைபேசி எண்ணை உள்ளிட்ட பிறகு, OK / ENTER பொத்தானை அழுத்தவும்.
4. இப்போது உங்கள் 4 இலக்க ATM PIN நம்பரை உள்ளிடுங்கள்.
5. எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ அந்த தொகையை சரியாகப் பதிவிடுங்கள்.
6. ENTER பட்டனை அழுத்துங்கள்.
7. ஏடிஎம் இயந்திரத்தின் ஸ்க்ரீன் இப்போது ரீசார்ஜ் செய்தியைக் காண்பிக்கும். அதனுடன் தொடர்புடைய தொகை உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதை தொடர்ந்து, உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் குறிப்பிட்ட ரீசார்ஜிற்கான உறுதிப்படுத்தல் மெசேஜைப் பெறுவீர்கள், அவ்வளவுதான்! இனி ஏடிஎம் இயந்திரத்திலிருந்தே உங்கள் ரீச்சார்ஜை செய்துகொள்ளலாம் என ஜியோ அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.