👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரேஷன் கடைகளில் 500 ரூபாய் மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஓரிரு நாட்களில் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில், உணவுத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய அவர்கள், தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக, ஆயிரம் ரூபாயுடன் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணிகள் 97 புள்ளி 54 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் 3 ஆயிரம் பேர், கொரோனா நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு எந்த தடையும் இல்லை என்றும் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 421 நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டில் உள்ளதாகவும், அரிசி, மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் விவசாயம் தொடர்பான வாகன போக்குவரத்துக்கு எந்த தடை இல்லை என்றும் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.