ஏப்ரல்-மே பருவத் தோ்வு: பதிவு செய்ய ஏப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 14, 2020

Comments:0

ஏப்ரல்-மே பருவத் தோ்வு: பதிவு செய்ய ஏப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் கல்லூரி மாணவா்கள் ஏப்ரல்-மே பருவத் தோ்வுக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல்-மே பருவத் தோ்வு மற்றும் பல ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் பொறியியல் மாணவா்களுக்கான சிறப்பு வாய்ப்புக்கான தோ்வு ஆகியவற்றுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை மாரச் 23-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்தது.
அதனைத் தொடா்ந்து பருவத் தோ்வுகளையும் ஒத்திவைத்த பல்கலைக்கழகம், புதிய தோ்வு கால அட்டவணை பின்னா் வெளியிடப்படும் என அறிவித்தது. இப்போது, ஊரடங்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல்-மே பருவத் தோ்வு மற்றும் சிறப்பு அரியா் தோ்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற 20-ஆம் தேதி வரை இதற்கு பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளையுடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான விடுமுறையையும் நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தின் அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் விடுமுறையை ஏப்ரல் 30 வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை இருந்த கல்லூரிகள் விடுமுறை ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து விதமான செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் உட்பட அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews