தமிழகம் வர வேண்டிய கொரோனா ரேபிட் கிட்டை அமெரிக்கா வாங்கியது எப்படி? கேப்பில் நடந்த டீல் பின்னணி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 12, 2020

Comments:0

தமிழகம் வர வேண்டிய கொரோனா ரேபிட் கிட்டை அமெரிக்கா வாங்கியது எப்படி? கேப்பில் நடந்த டீல் பின்னணி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் வர வேண்டிய கொரோனா ரேபிட் சோதனை கருவிகளை அமெரிக்க அரசு எப்படி தங்கள் நாட்டிற்கு திருப்பியது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவிற்கு எப்படி இதற்கான சூழ்நிலை அமைந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்துக்கு வரவேண்டிய ரேபிட் கிட்... அமெரிக்காவுக்கு போனது இப்படி தான்
கொரோனா.. இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்காதான். இந்த செய்தியை எழுதும் இந்த நேரத்தில் அமெரிக்காவில் மட்டும் தற்போது 533,115 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் 20,580 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் அதிகமான தேவை எண்ணெய் என்பது போய் தற்போது அமெரிக்காவின் மிக முக்கியமான தேவை மருத்துவ உபகரணங்கள் என்ற நிலை வந்துள்ளது. மருந்து பொருட்களை வாங்குவதற்காக அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் செய்யும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் வாங்குகிறது
அமெரிக்கா தற்போது மருந்து பொருட்களுக்காக அதிகம் நம்பி இருப்பது சீனாதான். சீனாவிடம் இருந்துதான் வெண்டிலேட்டர், மாஸ்குகள் மற்றும் மருந்துகளை அமெரிக்கா வாங்கி வருகிறது. இந்தியாவிடம் இருந்து ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்துகளை மட்டும் அமெரிக்கா வாங்கி வருகிறது. மற்ற பெரும்பாலான மருந்து தேவைக்கு சீனாவைத்தான் நம்பி இருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல மற்ற உலக நாடுகளும் இப்படி சீனாவைத்தான் நம்பி இருக்கிறது.
மருந்து பற்றாக்குறை பெரிய அளவில் உள்ளது
ஆம் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் சீனாவிடம் இருந்துதான் மருந்துகளை வாங்குகிறது. சீனாவிடம் இருந்துதான் அந்த நாடுகளும் வெண்டிலேட்டர், மாஸ்குகள் மற்றும் மருந்துகளை வாங்குகிறது. இதனால் அமெரிக்காவிற்கு செல்லும் மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது உலகம் முழுக்க தேவை இருப்பதால், அமெரிக்காவிற்கு சீனாவால் பெரிய அளவில் மருந்துகளை அனுப்ப முடியவில்லை. மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மருந்துகள் இல்லாமல் தவிக்கும் நிலை நெருங்கி வருகிறது. அமெரிக்காவிற்கு விரைவில் மருந்து பற்றாக்குறை வரும் நிலை உள்ளது.
அமெரிக்கா எப்படி அடித்து பிடுங்குகிறது
இதனால் தற்போது அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு செல்லும் மருந்துகளை அடித்து பிடுங்க தொடங்கி உள்ளது. அதாவது ஜெர்மனிக்கு, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லும் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க தொடங்கி உள்ளது. ஜெர்மனிக்கு சீனாவில் இருந்து 2 லட்சம் மாஸ்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதை விமான நிலையத்தில் கூடுதல் பணம் கொடுத்து அமெரிக்கா வாங்கியது. இதனால் ஜெர்மனுக்கு செல்ல வேண்டிய மாஸ்க் நியூயார்க் சென்றது.
பிரான்ஸ் எப்படி
பிரான்சிற்கு 20 லட்சம் மாஸ்குகளை சீனா ஏற்றுமதி செய்ய இருந்தது, சீனாவிடம் பிரான்ஸ் அவசர அவசரமாக இந்த 20 லட்சம் மாஸ்குகளை ஆர்டர் செய்தது. ஆனால் சீனாவில் இந்த மாஸ்க் ஏற்றுமதி செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கா அதை தங்கள் பக்கம் திருப்பி உள்ளது. பிரான்ஸ் கொடுத்ததை விட அதிக தொகை கொடுத்து அமெரிக்கா இந்த மாஸ்குகளை தங்கள் நாட்டிற்கு மாற்றிக்கொண்டு உள்ளது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
ஒரு ஒற்றுமை
இதில் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், ஜெர்மன் செல்ல வேண்டிய மாஸ்க் இருக்கும் சரக்கு விமானம், விமான நிலையத்தில் ஏற்றுமதி செய்ய தாமதம் ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரம் இந்த விமானம் புறப்பட தாமதம் ஆனது. இந்த 6 மணி நேர தாமதத்தை பயன்படுத்திதான் அமெரிக்கா உள்ளே புகுந்து பேரம் பேசியது. இந்த நேரத்தை பயன்படுத்தி, மருந்துகளை அதிக பணம் கொடுத்து வாங்கியது.
பிரான்ஸ் இப்படித்தான் நடந்தது
இதேபோல்தான் பிரான்ஸ் செல்ல வேண்டிய சரக்கு விமானம் இடையில் இறங்கி சரக்குகளை மாற்றும் மிக குறைந்த நேரத்தில் அமெரிக்க உள்ளே புகுந்து அதிக விலை கொடுத்து தங்கள் நாட்டிற்கு வாங்கிக்கொள்கிறது. அதாவது எங்காவது கொரோனா மருந்து பொருட்கள் சில மணி நேரம் ஏற்றுமதி செய்யப்படாமல் இருந்தாலே அதை அதிக பணம் கொடுத்து தங்கள் நாட்டிற்கு வாங்குவதை அமெரிக்கா வழக்கமாக கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் இதே நிலைதான் நடந்துள்ளது.
தமிழகம் இதே நிலை
தமிழகம் இதேபோல் சீனாவிடம் இருந்து ஏப்ரல் 2ம் தேதி 4 லட்சம் கொரோனா ரேபிட் சோதனை கிட்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த கிட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்காக விமான நிலையம் வரை வந்துவிட்டது. ஆனால் விமான நிலையம் வந்த போது, இந்திய மத்திய அரசு ஏப்ரல் 9ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், மாநில அரசுகள் வெளிநாடுகளிடம் இருந்து மருந்து பொருட்களை வாங்க கூடாது. உங்களுக்கு தேவை என்றால் எங்களிடம் சொல்லுங்கள் , நாங்கள் வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகம் செய்வோம் , நீங்களே தன்னிச்சையாக வாங்க கூடாது என்று கூறியது. இதனால் சீனா தமிழகத்திற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
மருந்து வருவதில் சிக்கல்
இதனால் சீனாவின் விமான நிலையத்தில் தமிழகத்திற்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படாமல் அப்படியே தேங்கி நின்றது. மத்திய அரசின் விதியால் , சீனா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றது. ஏப்ரல் 10ம் தேதி டெல்லி வர வேண்டிய கிட்கள், 12 மணி நேரமாக சீனாவில் தேங்கி இருந்தது. இந்த 12 மணி நேர இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, சரியாக அந்த நேரத்தில் உள்ளே புகுந்து கூடுதல் விலை கொடுத்து அந்த டெஸ்டிங் கருவிகளை வாங்கி உள்ளது. தமிழகத்தை விட அதிக பணம் கொடுத்துள்ளது. அதாவது ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எப்படி ஏமாற்றப்பட்டதோ அதேபோல்தான் தமிழகத்தையும் அமெரிக்கா ஏமாற்றி உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews