சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.
6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் 6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 199 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவாமல் தடுக்க அதிகளவில் சோதனை
கொரோனா வைரஸை பரவாமல் போராட, அதிகளவில் சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால், நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கொரோனா பரிசோதனைகளை வேகமாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றம் மாநில அரசுகள் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில அரசு பள்ளிகளையும் கொரோனா தடுப்பு வார்டாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது.
கொரோனா தனி வார்டாக பயன்படுத்த கொடுக்கலாம்
குறிப்பாக தனியார் பள்ளி கல்லூரிகளையும் விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தனி வார்டாக பயன்படுத்த கொடுக்கலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீடியோ கால் மூலமாக பாடங்கள் நடத்த பல பள்ளிகளும் ஏற்பாடு செய்து வருகிறது.
வாட்ஸ் ஆப் உதவியுடன் வீட்டிலேயே மாணவர்களுக்கு பாடம்
தற்போது, சென்னை கோடம்பாக்கத்தில் கில் நகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸப் மூலம் தங்கள் வகுப்புகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வாட்ஸ் ஆப் உதவியுடன் வீட்டிலேயே மாணவர்கள் பள்ளி சீருடைகள் அணிந்தபடி பாடம் படிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவளத்தங்களில் பரவி வருவதை காணமுடிகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.