சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கடந்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி யாக அளித்த எங்கள் கோரிக்கை குறித்து, முதல்வர் அறிவிப்பு செய்தால் ஒழிய போராட்டம் வாபஸ் கிடையாது
தமிழக அரசின் உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திலும் எந்தவித பலனும் இல்லாத நிலை யில், காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல், சத்துணவு ஊழி யர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
முதல் 10ம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு, சத்துணவு திட்டம் செயல் படுத்தப்படுகிறது. தமிழகத்தில்,ஒன்று
இதில், மாநில அள வில் ஒரு லட்சத்திற்கும் மேலான மையங்கள், ஒவ்வொன்றிலும் அமைப் பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள்
என ஊழியர்கள் பணியாற் கும் கூடுதலான பணியி டங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
இரண்டு, மூன்று மையங்களுக்கு ஒரே ஊழியர்கள் இடத்தில் சமைத்து, மதிய உணவு வழங்கும் நடைமு றையும் அமலில் உள்ளது. இதனால், பெரும் மன உளைச்சலு டன் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், இருக் கும் ஊழியர்களும், தங்க ளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலர் சந்திர பாண்டி கூறியதாவது:
சத்துணவு ஊழியர் களுக்கு வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய் வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என் பது உட்பட, 10க்கும் மேற் பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
சில மாதங்களுக்கு முன், 72 மணிநேர உண்ணா
விரத போராட்டம் நடத் திய போது அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்; பல னில்லை. எனவே, நாளை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஜன., 3ல் அறிவித்தோம்.
இதையடுத்து, சமூகந் லத்துறை இயக்குநர் எங் களை அழைத்து பேசி, போராட்டத்தை தள்ளி வைக்க கேட்டனர்.
கடந்த தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அளித்த எங்கள் கோரிக்கை குறித்து, முதல்வர் அறி விப்பு செய்தால் ஒழிய போராட்டம் வாபஸ் கிடையாது.
எனவே, பெரும்பா லான சத்துணவு மையங் கள் நாளை முதல் செயல் பட வாய்ப்பில்லை.
இவ்வாறு கூறினார்.
Search This Blog
Monday, January 19, 2026
Comments:0
Home
Daily report on nutrition in government schools
Food Safety Officer
food Schemes
சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.