1. மூளை வளர்ச்சி:
சதுரங்கம் பயிலும் பிள்ளைகளது மூளை வளர்ச்சியானது ஏனையவர்களை விட விரைவாக இருக்கிறது. இது Dendrites என்கின்ற மூளைப்பகுதியின் வளர்ச்சியை தூண்டுவதாக சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சில ஆய்வுகள் chess விளையாடும் மாணவர்களின் IQ மட்டமானது, ஏனைய மாணவர்ளின் IQ மட்டத்தை விட அதிகமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
3.படைப்பாற்றலை (creativity) அதிகரிக்கின்றது
இவ் விளையாட்டு சிந்திக்கும் ஆற்றலை அதிகரித்து பல கோணங்களில் ஆராயும் திறனை அதிகரிப்பதன் மூலம் படைப்பாற்றலை அதிகரிக்கின்றது.
4.தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கின்றது.
சதுரங்க விளையாட்டின் போது குறிப்பிட்ட நேர இடைவெளியில் யோசித்து பல தீர்மானங்களை எடுக்க நேரிடும். இந்த ஆற்றல் பின்னர் வாழ்கையில் சந்திக்கும் சவால்களை குறித்தான தீர்மானங்ளை எடுக்க உதவும்.
சதுரங்கம் பயிலும் போது பல நுணுக்கங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள பழகுவதால் காலப்போக்கில் ஞாபகசக்தி அதிகரிக்க உதவி புரிகின்றது.
6. தலைமைத்துவ பண்பை அதிகரித்தல்.
தீர்மானம் மேற்கொள்ளும் திறனுடன், பல சதுரங்க சுற்றுப்பயணங்களில் பங்கேற்பதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிப்பதன் விளைவாக தலைமை தாங்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகத்தான் முன்னாள் சோவியத் யூனியனில் சதுரங்கத்தையும் ஒரு பாடமாக கற்பித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.