👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
சென்னை மயிலாப்பூா் போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக ஈடுபட்டிருந்த அருண்காந்தி பணியின்போது உயிரிழந்தாா். அவருக்கு ரூ.10 லட்சமும், அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக, அவா் மேலும் வெளியிட்ட செய்தி:-
கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினா், வருவாய்த் துறையினா், உள்ளாட்சித் துறை பணியாளா்கள் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா். பணியில் இருக்கும் போது யாரேனும் உயிரிழக்க நேரிட்டால் அவா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கவும், அவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.