தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரூபாய் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 24, 2020

Comments:0

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரூபாய் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு - ரேஷனில் ஏப்ரல் மாத பொருட்களை இப்போதே வாங்கிக் கொள்ளலாம் - ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் - நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்- 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்
உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3,78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 16,503 பேர் உயிரிழந்துளளனர். இந்தியாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வைரசுக்கு 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2 நாள் விடுமுறைக்குப்பின் தமிழக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் பின்பற்றியதற்கு சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, சில எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்தார். கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார். முதல்வர் உரை முடிந்தப்பின் சட்டப்பேரவை நாளை முதல் நிறைவு செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியதும் கொரேனா பாதிப்பு நிவாரணமாக 82 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு.
* கொரோனா நிவாரண நிதியாக ரூ.3250 கோடி ஒதுக்கீடு.
* அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* மார்ச் மாதம் ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் ஏப்ரல் மாதம் வாங்கிக்கொள்ளலாம்.
* பிற அமைப்புசாரா தொழிலாளர் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசு, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
* நடைபாதை வியாபாரிகளுக்கு ரேசன் பொருட்களோடு கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும்.
* கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
* 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கூடுதலாக 2 நாள் ஊதியம் வழங்கப்படும்.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
* நகர முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடி சுடான உணவு வழங்கப்படும்.
* ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க மாநகராட்சியில் பொது சமையல் கூடம் அமைக்கப்படும்.
* அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews