Search This Blog
Tuesday, March 31, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வீட்டுக் கடன், வாகனக் கடன் ,பர்சனல் லோன் கடன்களுக்கான EMI கட்டும் தொகையானது மூன்று மாதங்களுக்கு தள்ளி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனை கட்டவே வேண்டாம் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. மூன்று மாதம் தள்ளி கட்ட சொல்லிஉள்ளது.
அது எப்படி ? விரிவாக காண்போம் :
நாம் சுமாராக 120 மாதங்கள் கடன் கட்டுகிறோம் என்றால் அதனை மூன்று மாதங்கள் தள்ளி கொடுத்துள்ளது .123 மாதங்கள் கட்டிக்கொள்ளலாம்.ஏப்ரல், மே, ஜூன் - 3 மாதங்களுக்கும் உள்ள தொகையை கடன் தொகை முடியும் மாத கடைசிக்கு பிறகு உள்ள மூன்று மாதங்களில் கட்டிக்கொள்ளலாம். உதாரணமாக 120 மாதங்கள் கட்ட வேண்டுமென்றால் 120 மாதங்கள் கட்டி முடித்துவிட்டு 121, 12,2 123 ஆவது மாதங்களாக ஏப்ரல், மே ,ஜூன் 2020ம் ஆண்டுக்கான தொகைகளை கட்டிக்கொள்ளலாம். 2020 ஜூலையில் ஜூலை மாதத்திற்கு உரிய தொகையை கட்டினாலே போதும்.சேர்த்து கட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே இது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படவில்லை. தள்ளி மட்டுமே வைத்துள்ளனர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக் கடனுக்கான வட்டி தொகையும் குறைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மாத சம்பளக்காரர்களின் நிலை என்ன ?
மாத சம்பள காரர்கள் இசிஎஸ் மூலமாக பணம் சென்று கொண்டிருந்தால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் கண்டிப்பாக ஏப்ரல் -2020 மாதத்திற்கு உரிய தொகையும் எடுத்துக்கொள்ளப்படும். ஏப்ரல் ,மே ,ஜூன் 2020 மாத கடன் தொகைகள் அந்தந்த மாதங்களில் எடுத்துக்கொள்ளப்படும். வங்கி கணக்கில் பணம் இல்லாவிடில் மட்டுமே ஏப்ரல் ,மே, ஜூன் 2020 மாதத்திற்கான கடன் தள்ளி கொடுக்கப்படும். ECS மூலம் கடன் வங்கியில் பணம் எடுக்கும்போது பணம் வங்கியில் இருப்பு இருந்தால் பணம் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 மாதங்களும் பணம் இல்லை என்றால் அதற்குரிய அதிக அபராதங்களும் எதுவும் போட மாட்டார்கள். இதனை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது.
கிரெடிட் கார்டு கடன் நிலைமை என்ன ?
கிரெடிட் கார்டுக்கான EMI கட்டும் பணம் தள்ளி கட்டுவதற்கான தகவல் மத்திய அரசின் உத்தரவில் இல்லை.எனவே கிரெடிட் கார்டு மூலம் பெற்றுள்ள கடன்களுக்கும், இந்த உத்தரவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.எனவே கிரெடிட் கார்டுகளுக்கான கடன் தள்ளிப்போகமாட்டாது.
தனியார் வங்கிகள்,தனியார் நிதி நிறுவனங்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் , ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் சொசைட்டி கடன், கூட்டுறவு சொசைட்டி கடன்களுக்கும் இது பொருந்துமா ?
நிச்சயமாக பொருந்தும். அரசு அறிவித்துள்ள இந்த மூன்று மாதங்களில் நிலுவை தொகையை செலுத்துங்கள் என்று வங்கி அலுவலர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவோ, தொந்தரவு செய்யவோ மாட்டார்கள்.
வங்கியில் பணம் இல்லை என்றால் எப்படி?
பணம் இருந்தால் எடுத்துக்கொள்ளும்.இல்லாவிடில் பணம் எடுத்துக்கொள்ளாது.கடனை அரசு தள்ளுபடி செய்யவில்லை.மத்தியஅரசு அறிவித்துள்ளது வாகன கடன்,வீடு கடன்,பர்சனல் லோன் மூன்றுக்கு மட்டுமே மூன்று மாதம் தவணையை தள்ளி கொடுத்துள்ளது.வங்கி கணக்கில் பணம் இல்லாதவர்களுக்கான தள்ளி வைப்புதான் அது.உதாரணமாக ,நான் இந்த மாதம் வாங்கிய சம்பளம் முழுவதும் எடுத்து செலவு செய்துவிட்டேன்.வங்கியில் பணமே இல்லை என்ற நிலையில் உங்களுக்கான அபராதம் விதிப்பில் இருந்து தவிர்ப்பு கிடைக்கும்.கடன் பணம் கட்ட வேண்டிய காலம் 3 மாதம் தள்ளி போகும்.இந்த குறிப்பிட்ட மூன்று மாதங்கள் பணம் கட்ட வில்லை என்றால் கடன் பெற்றவருக்கு வங்கி போன் செய்தோ,நேரிலோ தொந்தரவு கொடுக்க கூடாது.மேலும் கடன் கடன் கட்டாதவர் என்று சிபிலில் பெயரை சேர்க்க கூடாது. இந்த தகவல்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
BANKING
CORONA
IMPORTANT
INFORMATION
3 மாதங்களுக்கு EMI யார் யாருக்கு இல்லை - வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள்!
3 மாதங்களுக்கு EMI யார் யாருக்கு இல்லை - வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள்!
Tags
# BANKING
# CORONA
# IMPORTANT
# INFORMATION
INFORMATION
Labels:
BANKING,
CORONA,
IMPORTANT,
INFORMATION
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.