கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !
He is turning the education department into a riot department! District Chief Education Officer in controversy!
ஆசிரியர்களை , அலுவலகப் பணியாளர்களை ஒருமையில் தான் அழைத்துப் பேசுகிறார் . தொலைத்திடுவேன் , போட்டுத் தள்ளிவிடுவேன் என்று தான் பேசி வருகிறார் . கல்வித் துறையை இவர் கலவரத் துறையாக மாற்றி வருகிறார் . " என்பதாக , திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக் குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் , ஐபெட்டோ , அகில இந்தியச் செயலாளர் , வா . அண்ணாமலை..
என்னதான் பிரச்சினை என்ற கேள்வியோடு அவரிடம் பேசினோம். "திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஒன்றியம் எட்டான்குளத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கள ஆய்வுக்கு சென்ற. சி.இ.ஓ.சிவக்குமார் ஏதோ திருடனை பிடிக்கச் செல்லும் போலீசார் போல சன்னல் வழியாக எட்டிப்பார்த்தவாரே சென்றிருக்கிறார். அப்போது எமிஸ் பதிவுகளை செய்து கொண்டிருந்த தலைமையாசிரியரின் செல்போன வாங்கி ஆய்வு செய்திருக்கிறார். தலைமையாசிரியரின் இருக்கைக்கு எதிரே நாற்காலியில் அமர்த்து பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த அதே பள்ளியில் காலை உணவுத் திட்டத்தி கீழ் பணியாற்றும் பெண் பணியாளரை, அவருக்கு மாற்றாக பணியாற்ற வந்த ஆசிரியை எ ன்பதாக சந்தேகித்து அவரை . தனது செல்போனில் படம் எடுக்க முனைந்திருக்கிறார். இதுதொடர்பாக அப்பள்ளியின் தலைமையாசிரியர்டே பால்துரை அளித்தவிளக்கம் எதையும் ஏற்காமல், அங்கிருந்தபடியே மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தலைமையாசிரியர் பால்துரையை உடன் தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணை வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
மாணவர்களுக்கும் முன்பாக காலை 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு செல்பவர். பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். பணி நிறைவு பெற இன்னும் நான்குமாதங்களே உள்ளது.' என்றுகூறி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க தயங்கியபோதும், 'Superior நான் சொல்கிறேன், உடனே தற்காலிக பணி நீக்க ஆணை வழங்குமா..." என அங்கிருந்தபடியே உத்தரவிட்டிருக்கிறார். சி.இ.ஓ சிவக்குமார். இங்கு என்றில்லை. இவர் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியை தொடங்கிய திருப்பூர் தாராபுரம் தொடங்கி, மாவட்ட முதன்மை கல்லி அலுவலராக பணியாற்றிய தஞ்சாவூர், திருச்சிஎன இதுவரை அவர் பணியாற்றியஎல்லா இடங்களிலுமே இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி அதன் காரணமாக வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார். உடசியாக. திருச்சியில் பணியாற்றியபோதுஇதேபோலசாச்சையில் சிக்கி துணை இயக்குனராக சென்னைக்கு பணியிட மாறுதலில் அனுப்பினார்கள். இதற்கிடையில், எப்படியோ மீண்டும், முதன்மை கல்வி அதிகாரியாக அதுவும் ஏற்கெனவே தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை சாதிய ரீதியில் மட்டம் தட்டி பேசியதாக சர்ச்சையில் சிக்கிய அதே திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் பெற்றுவந்துவிட்டார். என்பதாக சி.இ.ஓ. சிவக்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டை அடுக்குகிறார், ஐபெட்டா வாஅண்ணாமலை. சர்ச்சை மற்றும் குறிப்பான அண்ணாமலை குற்றச்சாட்டுகள் தொடர்பான விளக்கம் அறிய, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
நாம் விசாரித்த வகையில், தஞ்சை மற்றும் திருச்சியில் இவர் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய சமயங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உறவினர் என்பதாக சொல்லிக்கொண்டும், அரசு நிகழ்வுகளில் அமைச்சருடன் நெருக்கமாக இருப்பதாகவும் காட்டிக்கொள்வார் என்கிறார்கள். இதன்காரணமாகவே, இவரது அதிகார அத்துமீறல்களை ஆசிரியர்கள் எதிர்க்கமுடியாமல் சகித்துக்கொண்டு செல்வதாகயும் சொல்கிறார்கள்
Search This Blog
Wednesday, January 01, 2025
Comments:0
Home
CEO
Chief Education Officer
District Education Officer
Education Department
Education Officer
கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !
கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.