மதுரை பேராசிரியர் உருவாக்கிய 'எலக்ட்ரிக் பைக் ஆம்புலன்ஸ்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 28, 2020

1 Comments

மதுரை பேராசிரியர் உருவாக்கிய 'எலக்ட்ரிக் பைக் ஆம்புலன்ஸ்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ மொபைல் துறை உதவி பேராசிரியர் முகமது ஜமீன் 'எலக்ட்ரிக் பைக் ஆம்புலன்ஸ்' உருவாக்கி அசத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள 'பைக் ஆம்புலன்ஸ்' மூலம் முதலுதவி மட்டுமே செய்ய முடியும். ஆனால் எலக்ட்ரிக் பைக் ஆம்புலன்ஸில் நோயாளியை அழைத்து செல்லும் வசதி உள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைத்த ஷீட் பெல்ட்டுடன் கூடிய இருக்கை உள்ளது. அதை தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.இத்துடன் டிரிப்ஸ் ஏற்றும் வசதி, மொபைல் வெண்டிலேட்டர், மெடிக்கல் கிட் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் பைக்கில் இணைத்துள்ளேன். குறுகிய தெருக்களில் கூட எளிதாக சென்று நோயாளியை பைக்கில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பாக மருத்துவமனைக்கு செல்லலாம். அவசர காலத்தில் இது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் மணிக்கு 80 கி.மீ., வரை செல்லும் திறன் கொண்டது.
'மேக் இன் இந்தியா' திட்டப்படி பைக்கில் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் இந்திய தயாரிப்பு. கல்லுாரி தலைவர் கார்த்திக், மாணவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் 8 மாதம் முயற்சிக்கு பின் இதை உருவாக்கினேன். காப்புரிமை வாங்கவும், அடுத்து ஆட்டோமேட்டிக் பைக் ஆம்புலன்ஸ் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன், என்றார்.தொடர்புக்கு: 99940 93612
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. அருமை சார். தங்களின் முயற்சிகள் வெற்றி அடையட்டும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews