கொரோனா பாதிப்புகள் சரிவடையத் தொடங்கும் என நம்பிக்கை
வடக்கு கோளப் பகுதியில் வெப்பநிலை உயரும்போது, கொரோனா வைரஸ் பாதிப்புகள் சரிவடையத் தொடங்கும் என்று சிறிது நம்பிக்கை உள்ளது. பிரிட்டனில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் மையத்தில் கேதே டெம்பில்டன் என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வு நடத்தினார். எடின்பர்க் மருத்துவமனைகள் மற்றும் ஜி.பி. அறுவை சிகிச்சைகளின் போது மூச்சுக் குழாய் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட மூன்று கொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு நடத்தியதில், ``கணிசமான குளிர்பருவ செயல்பாடு'' இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்கள் பெரும்பாலும் டிசம்பர் மற்றும் ஏப்ரலுக்கு இடைப்பட்ட மாதங்கள் தொற்றக் கூடியதாக இருந்தன, இன்புளுயன்ஸா போன்ற அதே பாணியில் இவற்றின் பாதிப்பும் இருந்தது. நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த நோயாளிகளிடம் பிரதானமாகக் காணப்பட்ட நான்காவது வகை கொரோனா வைரஸ், தொடர்ச்சியான செயல்பாடுகள் கொண்டதாக இருக்கவில்லை. கோவிட்-19 நோய்த் தொற்றுகூட வெப்பநிலை மாற்றத்தில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்பதற்கான, ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்படுகின்றன. உலகம் முழுக்க அது பரவிய தன்மையை வைத்துப் பார்த்தால், குளிரான மற்றும் வறண்ட சூழ்நிலைகளில் பரவுவதைப் போலத் தோன்றுகிறது. உலகம் முழுக்க கோவிட் -19 பரவிய 500 இடங்களின் வானிலை விவரங்களை ஒப்பீடு செய்து பார்த்ததில், வைரஸ் மற்றும் வெப்ப நிலை, காற்றின் வேகம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பது போல தெரிகிறது என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மற்றொரு ஆய்வில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் கோவிட்-19 பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் உலக அளவில் இந்த மாறுபாடுகளுக்கு வெப்ப நிலை மாறுபாடு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் வெளியிடப்படாத மற்றொரு ஆய்வில், இப்போதைய கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு மிதமான மற்றும் குளிரான பருவநிலைகள் மிகவும் உகந்தவையாக இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. அதற்கடுத்து வறண்ட பகுதிகள் அதற்கேற்ற சூழலாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் வெப்ப மண்டல நாடுகள் மிகக் குறைவான பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகளாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாதாரண நோய்த் தொற்றுகளில் இருந்ததைப் போன்ற அதே பாணியிலான போக்கு தீவிர நோய்த் தொற்றுகளில் இருப்பதில்லை. ஆனால் பருவநிலை மாற்றங்கள் குறித்து உண்மையான தகவல்கள் இல்லாத நிலையில், காலப்போக்கில் என்ன நிகழும் என்பதை யூகிக்க கம்ப்யூட்டர் மாடலிங் முறையை ஆராய்ச்சியாளர்கள் சார்ந்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதல் அடிப்படையிலான தகவல்களுக்கு விளக்கம் கூற முற்படுவது - மானிடர்கள் மத்தியில் சில காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் என்று கூறுவது சவால் நிறைந்ததாக இருக்கும். தீவிரமாகப் பரவும் தொற்றுகள் பல காரணங்களுக்காக பருவநிலை மாற்றத்துக்கு உட்பட்டவையாக இருக்கும் என்பதும், அது இப்போதைய கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பொருந்தாது என்பதும் குறைத்து மதிப்பிடுவதாக இருக்காது. சாதாரண நோய்த் தொற்றுகளில் இருந்ததைப் போன்ற அதே பாணியிலான போக்கு தீவிர நோய்த் தொற்றுகளில் இருப்பதில்லை. உதாரணத்திற்கு, ஸ்பானிஷ் ப்ளூ, கோடை மாதங்களில் உச்சகட்டத்தை அடைந்தது. ஆனால் பெரும்பாலான சளி, காய்ச்சல் தொற்றுகள் குளிர் பருவத்தில் ஏற்படக் கூடியவையாக உள்ளன.
வெப்பநிலை மாற்றத்தின் தாக்கம்
எனவே, மற்ற கொரோனா வைரஸ்கள் வெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்துக்கு ஆட்பட்டவையாக இருந்தனவா என்ற தகவலை பயன்படுத்தி, கோவிட்-19 நோய்த் தொற்றைக் கணிக்கும்போது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் தொடர்புடைய கொரோனா வைரஸ்கள் எந்த அளவுக்கு பருவநிலை மாற்றத்துக்கு ஆட்பட்டவையாக இருக்கும், இந்த நோய்த் தொற்று குறித்து நம்பிக்கை தருவதாக அந்தத் தகவல் எப்படி இருக்கும்? கொரோனா வைரஸ்கள் என்பவை "Enveloped Viruses" என்ற குடும்பத் தொகுப்பைச் சேர்ந்தவை. அதாவது அவை எண்ணெய்ப்படலமான உறைக்குள் இருப்பவை என அர்த்தம். அது கொழுப்பு உறையைக் கொண்டதாக, கிரீடத்தின் கம்பிகளைப் போன்ற அமைப்பில் புரோட்டீன்கள் பொருந்தியதாக தோற்றமளிக்கும். அதனால்தான் அந்தப் பெயர் வந்தது. லத்தீன் மொழியில் கொரோனா என்றால் கிரீடம் என்று அர்த்தம்.
பலரும் நம்புவதைவிட தீவிர நோய்த் தொற்று கொரோனா வைரஸ் வெப்பநிலை மாற்றத்துக்கு ஆட்படும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கம்ப்யூட்டர் மாடல்கள், உலகெங்கும் நிகழ்ந்த நோய்த் தொற்றுகளின் போக்குகளுக்கு ஒத்துப்போவதாக உள்ளன. அதிகபட்ச அளவிலான பாதிப்புகள் வெப்ப மண்டலத்துக்கு வெளிப்பட்ட பகுதிகளில் இருப்பதை அவை காட்டுகின்றன. அதேபோன்ற வெப்பம் மற்றும் ஈரப்பத நிலைக்கு ஆட்படும் தன்மை கோவிட்-19க்கு இருக்குமானால், உலகெங்கும் வெவ்வேறு காலக்கட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரிக்கும் என்று அராவ்ஜோ நம்புகிறார். ``இரண்டு வைரஸ்கள் ஒரே மாதிரி செயல்படக் கூடியவையாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது'' என்கிறார் அவர். ``ஆனால் இது ஒரு மாற்றுக்காரணி சமன்பாடாக இருக்காது. மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு வைரஸ் பரவுகிறது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் நிறைய மனிதர்கள் இருந்தால், அவர்களுக்குள் அதிக அளவில் தொடர்பு இருந்தால், நோய்த் தொற்றும் அதிகமாக இருக்கும். வைரஸ் பரவுதலின் போக்கைப் புரிந்து கொள்வதில் அவர்களுடைய நடத்தை முறைகள் முக்கியமானவை'' என்றும் அவர் கூறுகிறார். மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஓர் ஆய்வில், சராசரி வெப்ப நிலை 5-11 டிகிரி சென்டிகிரேடு (41-52 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ள நகரங்கள் மற்றும் உலகின் பிற பகுதிகளில் வைரஸ் அதிகமாகப் பரவுகிறது என கண்டறியப்பட்டது. ஆனால் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் கணிசமான பாதிப்புகள் இருந்தன. ஆசியாவில் வைரஸ் பரவல் குறித்து ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தக் கொரோனா வைரஸ் பலரும் நம்புவதைப் போல அல்லாமல் பருவநிலை மாற்றத்துக்கு ஆட்படும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று தெரிய வந்தது.
சீனாவில் ஜிலின் மற்றும் ஹெலாங்ஜியாங் போன்ற குளிர் மற்றும் வறண்ட மாகாணங்களில் வைரஸ் தீவிரமாகப் பரவிய நிலையில், குவாங்ஸி மற்றும் சிங்கப்பூர் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவிய விதத்தையும் பார்க்கும்போது, கோடை மற்றும் இளவேனில் காலத்தில் வெப்பநிலையும் ஈரப்பதமும் அதிகரிக்கும்போது, பாதிப்புகள் குறைவுக்கு வாய்ப்பு ஏற்படாது என்று தெரிய வருகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் பொது சுகாதாரத் துறையினர் தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோவிட்-19 வைரஸ் மிதமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளில் செயல்தன்மையுடன் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வக ஆராய்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் மாடல்கள் காட்டுகின்றன. இந்த வைரஸ் எந்த அளவுக்குப் பரவும் என்பது, சுற்றுச்சூழலில் செயல்தன்மையுடன் நீடித்திருக்கும் திறனுக்கும் அப்பாற்பட்டதாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த இடத்தில்தான் பருவநிலை மாறுபாடுகளுக்கும் நோய்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்வது சிக்கலானதாக இருக்கிறது. கோவிட்-19 போன்ற ஒரு நோயைப் பொருத்தவரையில், வைரஸை பரப்பக் கூடிய மக்கள்தான் பரவுதலைத் தீர்மானிக்கிறார்கள், பருவகால மாற்றத்தில் மக்களின் செயல்பாடுகள் தான் அதைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. உதாரணமாக, ஐரோப்பாவில் தட்டம்மை பாதித்தபோது, பள்ளிக்கூட செயல்பாட்டு காலத்துடன் அது ஒத்துப்போனது. விடுமுறை காலத்தில் குழந்தைகள் மூலம் அது பரவாத காரணத்தால் நோய் குறைந்தது. சீன புத்தாண்டை ஒட்டி ஜனவரி 25ஆம் தேதி ஏராளமானவர்கள் சீனாவை சுற்றி பயணம் மேற்கொண்டதால் தான், வுஹானில் இருந்து சீனாவின் பிற பகுதிகளுக்கும், உலகம் முழுக்கவும் நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
நம் நோய் எதிர்ப்பாற்றலில் வானிலை மாறுபாடும் குழப்பத்தை ஏற்படுத்தி, நோய்த் தொற்றுகளுக்கு ஆட்படும் அதிக வாய்ப்புகளை உருவாக்கிவிடும். நாம் எந்த அளவுக்கு தொற்றும் நோய்களுக்கு ஆட்படும் வாய்ப்பில் இருக்கிறோம் என்பதை முடிவு செய்வதில் நமது உடல்களில் உள்ள வைட்டமின் டி (D)அளவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. குளிர்பருவத்தில் நமது உடல் சூரிய வெளிச்சத்துக்கு குறைவாக ஆட்பட்டு, குறைவான வைட்டமின் டி உற்பத்தி செய்கிறது. ஏனெனில் நாம் குளிரில் வீடுகளுக்குள், போர்த்திக் கொண்டு அதிக நேரம் இருந்துவிடுகிறோம். ஆனால் சளிக்காய்ச்சல் போன்ற நோய்களில் பருவநிலை மாறுபாடுகளுக்கு பங்கு இருப்பதைக் காட்டுவதற்கு போதுமானதாக இது இல்லை என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிரான வானிலை நமது நோய் எதிர்ப்பாற்றலை பலவீனப்படுத்துகிறதா என்பது மேலும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. அப்படி வாய்ப்பு உள்ளது என சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், குளிரில் தொற்றுகளில் இருந்து நமது உடலை தற்காத்துக் கொள்ளும் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வேறு சில ஆய்வுகள் கூறுகின்றன. இருந்தபோதிலும், நோய்த் தாக்கத்துக்கு ஆளாகும் ஆபத்தை ஏற்படுத்துவதில், ஈரப்பத நிலைக்கு முக்கிய பங்கு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. காற்று உலர்ந்து இருக்கும்போது, நமது நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்களில் சவ்வுப் படலம் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒட்டும் தன்மை கொண்ட இந்த சவ்வுப்படலம், நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. அது குறையும் போது வைரஸ் தாக்குதலுக்கு ஆட்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
சீனாவில் விஞ்ஞானிகள் நடத்திய ஆர்வத்தைத் தூண்டும் ஓர் ஆய்வில், கோவிட்-19 பாதிப்பும் வானிலை சூழ்நிலையும் எந்த அளவுக்கு கொடூரமான தொடர்பு கொண்டவையாக இருக்கும் என்பதைக் காட்டியுள்ளன. சீனாவில் வுஹானில் சுமார் 2,300 மரணங்களை அவர்கள் கவனித்துப் பார்த்தனர். ஈரப்பதம், வெப்பநிலை, அன்றைய நாளில் இருந்த மாசுபாடு ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். கல்வியாளர் இதழில் அது இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், வெப்பநிலையும், ஈரப்பதமும் அதிகமாக இருந்த நாட்களில் மரண விகிதம் குறைவாக இருந்தது என்று அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலைகளுக்கு இடையில் இடைவெளி அதிகமாக இருந்த நாட்களில், மரணம் அதிக அளவில் இருந்ததாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த ஆய்வு பெரும்பகுதி கம்ப்யூட்டர் மாடலிங்கை அடிப்படையாகக் கொண்டது. எனவே, உண்மைான தொடர்பின் இயல்பும், உலகின் பிற பகுதிகளில் இதே நிலைமை இருக்குமா என்பதும் பொருத்திருந்து ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளன. கோவிட் - 19 நோய்த் தொற்றை உருவாக்கும் வைரஸ் புதியது என்பதால், அது தாக்கி குணமாகும் வரையில் யாருக்கும் அந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதாவது இந்த வைரஸ் பரவும், தொற்றும், மற்ற நோய்த் தொற்று வைரஸ்களைப் போலவே நோயை ஏற்படுத்தும் என்பது இதன் அர்த்தம்.
உலகெங்கும் இந்த நோய் வேகமாகப் பரவுவதற்கு, விமானப் பயணங்கள்தான் முக்கிய காரணமாக இருந்தது என்று சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் விட்டோரியா கோலிஜ்ஜா கூறியுள்ளார். ஆனால், சமுதாயத்துக்குள் அது பரவத் தொடங்கிவிட்டால், மக்களுக்கு இடையில் நெருக்கமான தொடர்பு தான் அது பரவுதலுக்குக் காரணமாக இருக்கிறது. மக்களுக்கு இடையிலான தொடர்புகளை நிறுத்துவது, நோய்த் தொற்று பரவல் அளவைக் குறைக்கும். இதைத்தான் பல அரசுகளும் செய்ய முயற்சித்து வருகின்றன. உலகெங்கும் பல நாடுகளில் பொது இடங்களில் முடக்க நிலையை அரசுகள் அமல் செய்து வருகின்றன. கோடை மாதங்களில் கோவிட்-19 பாதிப்புகள் குறைந்தாலும், அது முழுமையாக மறைவதற்கு வாய்ப்பில்லை. ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் தாக்கலாம். ``கோவிட்-19 பாதிப்பு பருவநிலை மாற்றத்துக்கு ஆட்படும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை'' என்கிறார் கோலிஜ்ஜா. ``மனிதர்களின் பழக்கவழக்க முறையும் இதில் முக்கியப் பங்காற்றும்'' என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், இந்த வைரஸ் பரவுதலைத் தடுக்க, இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவையா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது என்று அவர் எச்சரிக்கிறார். ``தொடர்புகள் மூலம் நோய் பரவல் அதிகரிக்கும் நிலையில், தொடர்புகள் குறையும்போது, அது தானாகவே ஓரளவுக்குக் குறையலாம்'' என்று அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கநிலை
வரக்கூடிய மாதங்களில் கோவிட்-19 பாதிப்புகள் குறையுமானால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கநிலை வெற்றிகரமாக அமைதல் போன்ற காரணங்களும் இருக்கலாம். மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்; அல்லது பருவநிலை மாற்றத்தின் தாக்கமாகவும் இருக்கலாம் என்று ஆல்பர்ட்டின் மாடல்கள் கூறுகின்றன. ``பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இருக்குமானால், மற்ற இரண்டு அம்சங்களின் தாக்கத்தை அது மூடி மறைத்துவிடும்'' என்று ஆல்பர்ட் எச்சரிக்கிறார். ``தீவிரமான முடக்கநிலை கடைபிடிக்கப்பட்ட நாடுகளில் பலரும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்ற நிலையில், அது குளிர் பருவத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக வந்தால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.