👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வரும் கல்வியாண்டு முதல் அரசு கல்லூரிகளில் இரு ஷிஃப்ட் முறையில் மாற்றம் ஏற்பட்டு காலையில் மட்டுமே வகுப்புகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை-மாலை என்கின்ற இரு பணிநேர முறை (ஷிப்ட்) மாற்றப்பட்டு காலையில் மட்டுமே பணிநேரம் என்கிற முறைக்கு மாற்ற உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 114அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன இதில் 65-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காலை மாலை என்று இரு பணி நேர முறை (ஷிஃப்ட்) பின்பற்றப்பட்டு வருகின்றது.இதில் காலை வகுப்புகள் காலை 8.45 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.
மாலை வகுப்புகள் பிற்பகல் 1.30 மணிமுதல் 6.06 வரை இயங்கி வருகிறது.காலை நேர வகுப்புகளில் நிரந்தர விரிவுரையாளர்கள் பேராசிரியர்களும் மாலை நேர பணியில் 1661 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்
.இந்நிலையில் இரு மணி நேர முறை என்பதை மாற்றிவிட்டு காலை மட்டுமே பணி நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில் மாலையில் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதே இதற்கு காரணம் .
மேலும் காலையில் மட்டுமே பணி நேரம் என்கிற முறையினை கொண்டு வரும் வேளையில் மாணவர் எண்ணிக்கை அதிகமிருக்கும் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
புதிய பணிநேரத்தின்படி இனி காலை பத்து மணிக்கு துவங்கும் வகுப்புகள் மாலை 4 மணிக்கு முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.