பள்ளி கட்டடம் கட்ட மாநகராட்சி நிதி ஒதுக்குமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 13, 2020

Comments:0

பள்ளி கட்டடம் கட்ட மாநகராட்சி நிதி ஒதுக்குமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''சென்னை மாநகராட்சி, மூலதன நிதியில் இருந்து, பள்ளி கட்டடங்கள் கட்ட, நிதி ஒதுக்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - செல்வராசு: முசிறி தொகுதி, பாப்பாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, கூடுதல் கட்டடம் கட்ட, அரசு முன்வருமா?அமைச்சர், வேலுமணி: ஆய்வு செய்து பரிசீலிக்கப்படும்.தி.மு.க., - மா.சுப்பிர மணியன்: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. முன்பெல்லாம் மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து, பள்ளி கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படும்; நான்கு ஆண்டுகளாக, நிதி ஒதுக்கப்படவில்லை. எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து மட்டும், கட்டடம் கட்ட, நிதி ஒதுக்கப்படுகிறது.
முன்பு போல், மூலதன நிதியிலிருந்து, நிதி ஒதுக்க வேண்டும்.அமைச்சர், வேலுமணி: மூலதன நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில், 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தி.மு.க., - ஆண்டி அம்பலம்: நத்தம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளது; உடனடியாக கட்டித் தர வேண்டும்.அமைச்சர், செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews