Search This Blog
Saturday, February 29, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான, பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒன்றிய அளவில், பள்ளிகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. ஓய்வு பெறுவதன் மூலம் காலியாகும் பணியிடங்களை, நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டுடன் காலியாகும் பணியிடங்களில், பதவி உயர்வு மூலம் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2011, டிச., 31க்கு முன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடத்துக்கான அனைத்து அரசு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களின் முன்னுரிமை பட்டியல், ஜன., 1 நிலவரப்படி தயாரிக்கப்பட உள்ளது.இதற்காக அந்தந்த மாவட்டங்களில் தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை, மார்ச், 10க்குள் அனுப்பி வைக்க வேண்டும். கல்வித்தகுதி மற்றும் துறைத்தேர்வுகள் தேர்ச்சி முழுமையாக இல்லாதவர்கள் சேர்க்கப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் :-
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல் முறைகள் அறிக்கையில் 01.01.2020 அடிப்படையில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமையாசிரியர்களில் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் அரசாணை நிலை எண் 497 கல்வி அறிவியல் தொழில் நுட்பவியல் துறை நாள் 26. 06.1995 ன்படி 57வயது முடித்தவர்களை வட்டாரக்கல்வி அலுவலர் (முன்பு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம்) நியமனத்திற்கு பரிசீலிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் 31.12.2019 அன்று 57 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்க கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995 ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 497 ன்படி ஒரே சம்பள அளவில் பணி மாறுதல் வழங்குவதற்கு மட்டுமே 57 வயது பூர்த்தியடைந்தவர்களை சேர்க்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கு இது பொருந்தாது. காலம் காலமாக ஓய்வுப்பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன் கூட பதவி உயர்வு வழங்கப்பட்டுவருவது நடைமுறையில் இருந்துவருகிறது. எனவே 57 வயது முடிந்த முழு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களையும் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு பணிமூப்பு பட்டியலில் சேர்த்திட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
வட்டாரக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.