FASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா? அப்போ இதை பண்ணுங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 15, 2020

Comments:0

FASTag அடுத்த 15 நாட்களுக்கு இலவசமாக வேணுமா? அப்போ இதை பண்ணுங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிப்ரவரி 29ம் தேதி வரை, மத்திய அரசு மீண்டும் ஃபாஸ்டேக்கை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. மின்னணு கட்டண வசூலை ஊக்குவிக்கும் முயற்சியில், ஃபாஸ்டேக்கின் பயனர்களுக்கு ரூ.100 மதிப்பிலான கட்டணத்தை இலவசமாக்கியுள்ளது. FASTag Users Want To Use Fastag free for the next 15 days? Then Know This First
பிப்ரவரி 29ம் தேதி வரை, மத்திய அரசு மீண்டும் ஃபாஸ்டேக்கை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. மின்னணு கட்டண வசூலை ஊக்குவிக்கும் முயற்சியில், ஃபாஸ்டேக்கின் பயனர்களுக்கு ரூ.100 மதிப்பிலான கட்டணத்தை இலவசமாக்கியுள்ளது. இந்த சலுகையை அடுத்த 15 நாட்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இலவச ஃபாஸ்டேக்

வாகன உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாக்கள், பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள், பொதுவான சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட விற்பனை இடங்களில் உரிமையாளரின் செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி) மூலம் பிப்ரவரி 29 வரை இலவச ஃபாஸ்டேக்கை மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து நுகர்வோருக்கும் இலவசம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி ரூ.100 மதிப்புள்ள ஃபாஸ்ட்டேக் கட்டணம் அடுத்த 15 நாட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை, NHAI தங்கள் வாகனத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து நுகர்வோருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம்

என்ஹெச் கட்டண டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டாக் வழியாகப் பயனர் கட்டணத்தின் டிஜிட்டல் சேகரிப்பை மேலும் அதிகரிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) இந்த சலுகையை அறிவித்துள்ளதாக அதன் அறிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயமும் உள்ளது.
இவர்களுக்கு மட்டும் இலவசம் கிடையாது

கவனிக்க வேண்டியது, அரசாங்கம் NHAI ஃபாஸ்ட்டேக் கட்டணங்களை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் Paytm , ICICI, HDFC போன்ற வேறு மூன்றாம் தரப்பு வழங்கிய ஃபாஸ்ட்டேக்களுக்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று அர்த்தமில்லை. அரசாங்கம் இல்லாமல் மற்ற தனிநபர் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வழங்கிய அட்டைகளுக்கு இந்த சலுகை கிடையாது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews