School Morning Prayer Activities 17.02.20 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 16, 2020

Comments:0

School Morning Prayer Activities 17.02.20


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

திருக்குறள்


அதிகாரம்: அறன்வலியுறுத்தல்

குறள் எண் : 40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

பொருள்:

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

பழமொழி

A willful man will have his own way

 தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

ஒருவர் தன் தீய செயலில் இருந்து விலகி நிற்பதால் மட்டும் அவர் செயலற்ற நிலையை அடைய முடியாது.மனதளவில் விலகிவிடுதல் வேண்டும்.

             -பரமஹம்சர்

பொது அறிவு

1.முதன் முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் யார்?

 தாலமி

2.பூச்சி இனத்தில் மிகவும் அறிவாற்றல் உடையது எது?

எறும்பு

English words & meanings

 Refined - made pure by having other substances taken out of it.கலப்படம் நீக்கித் தூய்மைப்படுத்தப்பட்ட; சுத்திகரிக்கப்பட்ட.

receptive
Learn to pronounce

ready to listen to new ideas. கருத்துக்களை ஏற்கும் மனதுடைய.

ஆரோக்ய வாழ்வு

பேரீச்சம்பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சினை இருப்பின் தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும்.

Some important  abbreviations for students

Ts - Touch screen.

U - User-worn

நீதிக்கதை

இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால்...

ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது.

ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்.

இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான்..

தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.

அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்திய அவன் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது.

அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார்.

பின் அவனிடம் உன்னிடம்,'' இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு, இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம் தான்'' ஏற்படும் என்றார்.

ஆம்.,நண்பர்களே..

பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது.

குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்கள்
மகிழ்வுடன் வாழ்கிறார்கள்.

அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது மனநிறைவோடு வாழ்கிறார்கள்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.

💐💐💐💐💐

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

சேவை-தொண்டு     
சௌகரியம்  - வசதி 
சேஷ்டை  - குறும்பு
தாகம்-வேட்கை
தேதி-நாள்

இன்றைய செய்திகள்

17.02.20

* காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 25-ஆம் தேதி தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தில் நடைபெறவுள்ளது.

* மாற்றுக் கருத்துள்ளவா்களாக இருக்க தைரியம் கொள்ளுங்கள்: மாணவா்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அறிவுரை.

* வாக்காளர்கள் தங்கள் தொகுதிகளில் ஊரில் உள்ள நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் தொலைதூர நகரங்களிலிருந்து வாக்களிக்க அனுமதிக்கக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பத்தை வருங்காலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக சென்னை ஐஐடியுடன் கரம்கோர்த்துள்ளதாக மூத்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* தேசிய சீனியா் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் ஆகியோா் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

* 20 கி.மீ நடை ஓட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா் இந்திய வீராங்கனை பாவனா ஜாட்.

Today's Headlines

🌸The Cauvery Water Management Commission's meeting will be held on the 25th of this month at the Central Water Resources Commission in Delhi.

 🌸 Chief Justice Chandrasud advised students to be brave to have alternative options.

 🌸 Senior Election Officers said that in future with the help of IIT Chennai they are going to introduce a new technology in election. With that the citizens from the remote city can vote from their place without going to the polling stations.

 🌸Joshna Chinnappa and Sourav Ghoshal of Tamil Nadu won the championship again at the National senior Squash Tournament.

 🌸Indian athlete Bhavana Jat  qualified for Tokyo Olympics in 20 kilometre walkathon

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews