👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வனக்காப்பாளர் பணி தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்தவர்கள், அதில் திருத்தம் செய்ய, வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு முறையில் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான தேர்வில் பங்கேற்க, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி, ஜனவரி, 25ல் துவங்கியது; வரும், 14ல் முடிகிறது. இதில், பதிவு செய்தவர்கள், பாலினம், சிறப்பு ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டுக்கான சமுதாய பிரிவு போன்ற, தகவல்களை தவறுதலாக அளித்திருந்தால், அவற்றை சரிசெய்ய வாய்ப்பு அளிக்க, வனத்துறை முடிவு செய்துள்ளது.
விண்ணப்ப பதிவு பணிகள் முடிந்த பின், வரும், 15 முதல், 17 வரை, திருத்தம் செய்யலாம்.மேலும், 'ஆன்லைன்' முறையில், மாதிரி தேர்வு துவங்கப்பட்டுள்ளது. வனத்துறை இணையதளத்தில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை, தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளில் பெறலாம் என, வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.