வீணாகும் காகிதங்களும் அலங்கார பொருளாகும்: அசத்திய மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 12, 2020

Comments:0

வீணாகும் காகிதங்களும் அலங்கார பொருளாகும்: அசத்திய மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வீணாகும் காகிதங்களை வீட்டின் அலங்காரப் பொருட்களாக மாற்றுதல், புதிய கண்டுபிடிப்புகள் என, அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். உடுமலை அருகே பாலப்பம்பட்டி ருத்ரவேணி பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. கல்லுாரி ஆலோசகர் மஞ்சுளா கண்காட்சியை துவக்கி வைத்தார். கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் நாட்டுத்துரை, கல்லுாரிக்கல்வி நெறியாளர் ராமநாதன், வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில உறுப்பினர் சசிக்குமார், சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காட்சியில், பழைய காகிதங்களிலிருந்து, கலைப்பொருட்கள், பயனுள்ள சிறிய ஜாடிகள், தட்டு, அலங்கார பொருட்கள் என தங்களின் கைவினைத்திறன்களை வெளிப்படுத்தி படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும், நான்கு சக்கர வாகனங்களில், &'சீட் பெல்ட்&' அணிவது, மது அருந்தாமல் ஓட்டுவது என வாய்மொழியாக மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், அதற்கான விதிகளை பின்பற்றினால் மட்டுமே வாகனத்தை ஓட்ட முடியும் என்ற படைப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
தொடர்ந்து, உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் போக்கு வரத்தில் காத்திருக்காமல் செல்வது, மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக், மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், ராக்கெட் செயல்படுவதன் அடிப்படை, கழிவுநீரை சுத்திகரிப்பது, போக்குவரத்து விதிமுறைகள், அணையிலிருந்து சோலார் மூலம் மின்சக்தி தயாரிப்பு, இயற்கையான முறையில் பேனா மை தயாரிப்பு, ரயில் விபத்துகளை தடுக்கும் சென்சார் முறை, தெருவிளக்குகள் தானியங்கி முறையில் செயல் படுதல், விளை நிலங் களுக்கு, தண்ணீர் வீணாகாமல் நீர் பாய்ச்சுவது, ஓசோன் பாதுகாப்பு, என மாணவர்கள், தங்களின் திறன்களை பலவிதமான படைப்புகளாக செயல்விளக்கத்தோடு காட்சிபடுத்தினர். தொடர்ந்து, மாணவர்களுக்கான வினாடிவினா, ஓவியப்போட்டி, படத்தொகுப்பு போட்டிகள் நடந்தன. இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கண்ணன், தலைமை வகித்தார். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், தேசிய அளவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் எவ்வாறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews