சர்வதேச அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் இளம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு குறுப்பிட்ட சீன கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்குவதோடு உதவித்தொகையையும் இந்த அமைப்பு வழங்குகிறது.
ஆண்டுதோறும் 200 முதுநிலை மாணவர்கள் மற்றும் 300 பிஎச்.டி., மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை விபரம்:
* முழு கல்வி கட்டணம்
* விண்ணப்பக் கட்டணம்
* மருத்துவ காப்பீடு
* சொந்த நாட்டில் இருந்து சீனாவிற்கு சென்று வர விமானக் கட்டணத்தில் சலுகை
* முதுநிலை மாணவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் மற்றும் பிஎச்.டி., மாணவர்களுக்கு மாதம் ரூ. 70 ஆயிரம் உதவித்தொகை.
உதவித்தொகை காலம்:
முதுநிலை மாணவர்களுக்கு 36 மாத காலம் வரையிலும், பிஎச்.டி., மாணவர்களுக்கு 48 மாத காலம் வரையிலும் இந்த மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* சீன குடியுரிமை பெற்றவராக இருக்கக்கூடாது
* ஆங்கிலம் அல்லது சீன மொழியில் உரிய புலமை பெற்றிருத்தல் அவசியம்
* டிசம்பர் 31, 2020 தேதியின்படி, முதுநிலை படிப்பிற்கு 30 வயதிற்கு உட்பட்டவராகவும், பிஎச்.டி., படிப்பிற்கு 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
* யு.எஸ்.டி.சி., அல்லது யு.சி.ஏ.எஸ்., விதிமுறைக்கு ஏற்ப தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
* தற்போது சீன கல்வி நிறுவனங்களில் படிப்பவராக இருக்கக்கூடாது.
* தேர்வு செய்யப்படும் மாணவர்கள் குறிப்பிட்ட கால சீன மொழி பயிற்சியை பெற வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
விபரங்களுக்கு: http://isa.ustc.edu.cn/
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.