IBPS Clerk Prelims Score Card 2020: Institute of Banking Personnel Selection எனப்படும் ஐபிபிஎஸ் தேர்வாணையம் கிளார்க் பணிக்கான முதனிலைத் தேர்வு மதிப்பெண் விபரங்களை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடையமதிப்பெண்களை ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வங்கிகளில் கிளார்க் பணிக்கான IBPS தேர்வு கடந்த டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தேர்வின் முடிவுகள் ஜனவரி 1 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது IBPS Clerk Prelims Scorecard மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐபிபிஎஸ் கிளார்க் பணிக்கான முதனிலைத் தேர்வு எழுதியவர்கள், தங்களுடைய மதிப்பெண்களை ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
IBPS Clerk Prelims தேர்வு நாள்: 7,8 டிசம்பர் 2019
IBPS Clerk Prelims தேர்வு முடிவு வெளியான நாள்: 1 ஜனவரி 2020
IBPS Clerk PrelimsScorecard மதிப்பெண் விபரங்கள் வெளியான நாள்: 8 ஜனவரி 2020
IBPS Clerk Mains Exam முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: 19 ஜனவரி 2020
புரோபஷனல் அலோட்மெண்டை்: ஏப்ரல் 2020
படி 1: முதலில் ibps.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: முகப்பு பக்கத்தில் IBPS Clerk PrelimsScorecard 2020 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்
படி 3: இப்போது IBPS Clerk PrelimsScorecard அடங்கிய பக்கம் காட்டப்படும்
படி 4: அதில் பதிவு எண், கடவுச்சொல் ஆகியவற்றை கொடுத்து எண்டர் செய்ய வேண்டும்
படி 5: IBPS Clerk PrelimsScorecard இப்பேது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.