👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு உணவு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கள பயிற்சி முகாம் நடைபெற்றது. விவசாயி செல்வராஜ் வரவேற்றார். பயிற்சியாளர் உதயகுமார் பாரம்பரிய இயற்கை வேளாண்மை நோக்கம், இயற்கை இடுபொருட்கள் பஞ்சகாவ்யா, மீன் அமிலம், மூலிகை பூச்சிவிரட்டி தயாரித்தல் மற்றும் நஞ்சில்லா உணவு குறித்தும் ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
நெல் பாதுகாப்பு மையத்தில் பயிரிடப்பட்டுள்ள 52 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து மாணவர்கள் கேட்டறிந்தனர். இதில் ஆசிரியர் செல்வம், மாதவன், சேகல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொருக்கை உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இயற்கை விவசாயத்தை பாதுகாப்போம், இயற்கை விவசாயத்திற்கு திரும்புவோம் என்று மாணவ , மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர் . முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.