👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின 5 நிமிட குறும்பட போட்டி அறிவிப்பு
தி.மலை மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தேசிய பெண் குழந்தைகள் தினம் வரும் 24-ம் தேதி ‘நான் பெண் குழந்தையாக இருக்க பெருமைப்படுகிறேன்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக ‘தெய்வம் தந்த வரம்-மகள்’ என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட வுள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் சிறந்த குறும் படத்துக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வுள்ளது.
எனவே, குறும்பட போட்டி யில் பங்கேற்க விரும்புபவர் கள் வரும் 16-ம் தேதிக்குள் தங்களின் குறும்படத்தை சி.டியாக அல்லது பென் டிரைவில் பதிவு செய்து நேரில் அல்லது 99439-02246 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாக அல்லது
dswo.msktvm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் முழு விவரங்களுடன் அனுப்பலாம்.
குறும்படம் 5 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண் டும்.
இந்த குறும்படத்துக்கான பதிப் புரிமை மாவட்ட சமூக நலத் துறையை மட்டுமே சேரும். இந்தப் போட்டியில் திருவண்ணாமலை மாவட் டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.