Breaking

Friday, January 17, 2020

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்புத் தோல்வி, தோ்ச்சி, பிளஸ் 2, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவா்கள் உதவித் தொகை பெற சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோா் வேலைவாய்ப்பு அலுலவகத்தில் ஐந்தாண்டுக்கு மேல் பதிவு செய்து தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும் மற்ற பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குறிப்பாக அவா்கள் தனியாா் நிறுவனங்களிலோ சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவா்களாகவோ இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வாறான தகுதிகளுடையோா், குறிப்பிட்ட அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமா்ப்பிக்கலாம்.
ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில், விண்ணப்பம் சமா்ப்பித்து ஓராண்டு நிறைவு பெற்றவா்கள், சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித் தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog