👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 மாதகால சான்றிதழ் வகுப்பை உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சிஏஏ மற்றும் சட்டப்பிரிவு 370 குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரயாக்ராஜில் உள்ள உத்தரப் பிரதேச ராஜரிஷி தான்டன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சான்றிதழுடன் கூடிய 3 மாதகால வகுப்பைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மண்டல இயக்குநர் சிகே சிங் தெரிவிக்கையில், "இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் முன்முயற்சியை எடுத்துள்ள முதல் கல்வி நிறுவனம் இதுவாகும். சிஏஏ குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், இந்த வகுப்பு புதிய சட்டம் குறித்த பார்வையை தெளிவுபடுத்த உதவும். ஜனவரி மாதம் தொடங்கவுள்ள இந்த வகுப்புக்கான இணையதளப் பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது" என்றார்.
இதன் அடுத்த வகுப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது. நாட்டில் உள்ள யார் வேண்டுமானாலும், இதற்குப் பதிவு செய்யலாம். இந்த வகுப்புக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 500 ஆகும். இந்த வகுப்பு உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 200 மையங்களில் நடைபெறுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.