5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 21, 2020

Comments:0

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை என்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறினார். மேலும் 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சுலபமான கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் என் அவர் தெரிவித்தார். மாணவர்களின் திறனைக் கண்டறியவே பிற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் 7வது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தை பெற்றுக்கொண்டு வார விடுமுறையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாக கூறினார்.
குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். எனவே அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை கண்டறியும் பொருட்டு 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இனி மார்ச் மாதம் தான் நீட் பயிற்சி வகுப்புகள் நடக்கும் என கூறினார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சியளிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கூறினார்.
தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை மற்ற பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்பதால் இந்த ஆண்டு மேற்கண்ட வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வுகள் நடத்துவது தொடர்பாக தொடக்க கல்வித்துறை சில வழிகாட்டு நெறிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பின்னர் 2019ம் ஆண்டு அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பின்பற்றி தேர்வு நடத்த வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து தேர்வு மையத்துக்கு அதிக தூரம் பயணம் செய்து சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் 1 கிமீ தூரத்துக்குள் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும், 3 கிமீ தூரத்துக்குள் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும். அதற்கான போக்குவரத்து வசதிகள், போதுமான இட வசதிகள் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேனிலை, சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, இது குறித்து ஊடங்களில் செய்தி வெளியாகி பொதுமக்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் வந்தன. அதனால், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 9ம் தேதி தெரிவித்தார். தொடக்க கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தேர்வு மையங்கள் அமைய வேண்டிய தூரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் பேட்டியில் அதே பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதில் எதை பின்பற்றுவது என்று கல்வித்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும் கேட்டு ஆணைகளை வெளியிட வேண்டும். குழப்பங்கள் இல்லாத வகையில் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவிலேயே இல்லை 5,8ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத இந்த தேர்வு முறையை தமிழகத்தில் மட்டும் அவசரமாக நடத்தி மாணவர்களின் எதிர்காலக் கனவை சிதைக்க அரசு முயற்சிக்கிறது. ஏழை எளிய மாணவர்–்களின் நலன் கருதி உடனடியாக 5,8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மாநில அரசும் பள்ளிக் கல்வித்துறையும் கைவிட வேண்டும். இதே கருத்தை பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் இந்த கருத்தை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறைக்கு மனு கொடுத்துள்ளனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews