Search This Blog
Tuesday, January 28, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
TN Board Exam Time Table: நடப்பு ஆண்டிற்கான TN Public Exam 10,11,12 பொதுத்தேர்வில் கேள்விகள் எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டிற்கான 10,11,12 பொதுத்தேர்வில் கேள்விகள் எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.dge.tn.gov.in/ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கேள்விகள், பாடப்புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி கூறுகையில், புதிய பாடத்திட்டத்தின் படி வினாத்தாள் கட்டமைப்பு தயாரிக்காதது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. எனவே, பொதுத்தேர்வில் கேள்விகள் எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். மாணவர்கள் பாடம் முழுமையும் படித்து தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.'
பொதுவாக அரசுப்பள்ளி, அரசுப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் வினாவங்கி, முக்கியமான பாடப்பகுதியை மட்டுமே படித்து தேர்வுக்கு தயராகி வருகின்றனர். இந்த சூழலில் பாடப்புத்தகத்தில் எந்த பகுதியில் இருந்தும், எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படலாம் என்று கூறுவது, மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.
மேல்நிலை முதலாம் | இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லாத நிலையில் , புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தும் , பாடம் சார்ந்தும் வினாக்கள் பொதுத்தேர்வில் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது .
* 2019 - 20 கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பிற்கும் புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , இவ்வகுப்பு மாணவர்களுக்கும் வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலை உள்ளதால் , சென்ற ஆண்டு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே மாணவர்கள் புத்தகம் முழுமையும் படித்து புரிந்து கொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் மேலும் , வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லை என்பதால் வினாக்கள் எந்த பாடத்திலிருந்தும் எந்த வகையிலும் ( வினாத்தாள் வடிவமைப்பில் ( Pattern ) மாற்றமின்றி கேட்கப்படலாம் .
* மாதிரி வினாத்தாள் சான்பது வினாத்தாள் வடிவமைப்பான பகுதி பிரிவுகள் மதிப்பெண்கள் ஒதுக்கீடு பற்றி மாணவர்கள் ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காகவே அன்றி மாதிரி வினாத்தாட்களில் கேட்கப்பட்டுள்ள வினா வகைகளே ( எடுத்துக்காட்டாக பொருத்துக கோடிட்ட இடங்களை நிரப்புக , தலைப்பு வினாக்கள் , வரைபட வினாக்கள் , வடிவியல் வினாக்கள் மற்றும் பல ) கேட்கப்பட வேண்டும் என கட்டாயமில்லை .
* ஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது எனவும் , ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள் எந்தவொரு வடிவிலும் இருக்கும் என்பதனை அனைத்து மாணவர்கள் | ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் .
* வினாத்தாள் கட்டமைப்பு தேவையில்லை என்பது அரசின் கொள் . முடிவாகும் . காவே , மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என பானவர்கள் | ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது . மாதிரி வினாத்தாள் , வினாத்தான் வடிவமைப்பிற்காக , ( Pattern ) மட்டுமே வெளியிடப்படுகிறது .
* கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு வரை Blue Print இருந்ததால் , கட்டமைப்பு மாற்றமின்றி வினாக்கள் கேட்கப்பட்டன . ஆனால் புதிய பாடத்திட்டத்தில் கட்டமைப்பு இல்லாததால் , எந்த வகையான வினாக்களும் கேட்கப்படலாம் . ஆனால் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இருக்காது என்ற விவரத்தினை மாணவர்கள் / ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
DGE/DSE/DEE
EXAMS
STUDENTS
TEACHERS
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Tags
# DGE/DSE/DEE
# EXAMS
# STUDENTS
# TEACHERS
TEACHERS
Labels:
DGE/DSE/DEE,
EXAMS,
STUDENTS,
TEACHERS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.