CTET: 24 லட்சம் பேர் எழுதியதில் 5½ லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 28, 2019

Comments:0

CTET: 24 லட்சம் பேர் எழுதியதில் 5½ லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் திபெத்திய பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (‘சிடெட்’) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நடத்துகிறது.20 மொழிகளில் நடைபெறும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு இந்த ஆண்டு கடந்த 8-ந்தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 110 நகரங்களில் 2 ஆயிரத்து 935 மையங்களில் 2 தாள்களாக தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 28 லட்சத்து 32 ஆயிரத்து 120 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 24 லட்சத்து 5 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுதினார்கள்.
அதில் முதல் தாள் தேர்வை 14 லட்சத்து 13 ஆயிரத்து 390பேரும், 2-ம் தாள் தேர்வை 9 லட்சத்து 91 ஆயிரத்து 755 பேரும் எழுதியது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதியவர்களுக்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய 24 லட்சத்து 5 ஆயிரத்து 145 பேரில், 5 லட்சத்து 42 ஆயிரத்து 285 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் ஆண் தேர்வர்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 718, பெண் தேர்வர்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 558, திருநங்கைகள் 9 பேர் அடங்குவார்கள். தேர்ச்சி சதவீதம் 22.55 ஆகும். தேர்வு நடைபெற்று முடிந்த 19-வது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதுதான் முதல் முறை என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews