👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரை: 'வேலைவாய்ப்புக்களை பாதிக்காத வகையில் கல்லுாரிகளில் புதிய படிப்புகள் துவங்க வேண்டும்'' என மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இப்பல்கலையில் நடந்த கல்விப் பேரவை கூட்டத்தில் பேராசிரியர் கண்ணன், பி.எஸ்சி., மரைன் சயின்ஸ் அன்ட் ஹாஸ்பிட்டாலிட்டி' என்பதை மரைன் ஹாஸ்பிட்டாலிட்டி சயின்ஸ் என மாற்றம் செய்ய தீர்மானத்தை கொண்டுவந்தார்.
இதற்கு சிண்டிகேட் உறுப்பினர் தீனதயாளன், 'இதுபோன்று மாற்றம் செய்யும்போது சம்மந்தப்பட்ட பாடத்திட்டத்தில் கட்டாய பகுதிகள் உரிய அளவில் இடம் பெற வேண்டும்' என்றார்.பேராசிரியர் பொன்னுசாமி, 'எம்.ஏ., பொருளியல் பாடம், 'பொருளியல் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் மதுரையில் ஒரு கல்லுாரியின் மாணவிகள் பலர் வேலை வாய்ப்பை இழந்தது சர்ச்சையானது' என்றார்.
துணைவேந்தர் கிருஷ்ணன் பேசியதாவது: அந்த படிப்புக்கு கட்டாயப் பகுதிகளை யு.ஜி.சி., குறிப்பிட்டிருக்கும் சதவீதம் சேர்க்க வேண்டும். புதிய படிப்பு துவங்குவதற்கு முன் இதை கல்லுாரிகள் கவனிக்க வேண்டும்.
இதுகுறித்து பல்கலை 'போர்டு ஆப் ஸ்டடிஸ்' கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். டி.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., போன்றவை அந்த படிப்புக்களை அங்கீகரித்துள்ளனவா அல்லது அதற்கு இணையான சான்று பெறமுடியுமா என கல்லுாரிகள் கண்காணித்து மாணவர் எதிர்காலம் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.