👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளி தரத்தை மேம்படுத்த இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டமா? அதுவும் தமிழ்நாட்டிலா? எனது 13 வருட பணி அனுபவத்தில் கல்வி குறித்த கலந்துரையாடலில் இப்படியொரு கருத்துக் கேட்புக் கூட்டம் இல்லையில்லை தனித்தனியாக அதுவும் மண்டல அளவில் சொல்வதை அப்பொழுதே கணினியில் பதிவு செய்து அதனை இறுதியில் தொகுத்து வழங்கியது என *புதிய பாடத்திட்டத்தில் / பாடப்புத்தகத்தில் நமது ஆசிரியர்கள் மூலமே புரட்சியை ஏற்படுத்திவிட்டுச் சென்ற மதிப்பு மிகு முன்னாள் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் அய்யா அவர்களுக்குப் பின் அதே மாதிரியான அணுகுமுறையால் நேற்று நமது கல்வித்துறை ஆணையர் மதிப்பு மிகு சிஜி.தாமஸ் வைத்யன் அவர்கள் கருத்துக் கேட்ட விதமும் அணுகுமுறையும் கல்வித் தர மேம்பாட்டின் மாற்றத்திற்கான தொடர் ( அறி) குறி நேற்று கோவையில் தொடங்கியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது
தர மேம்பாடு குறித்து கீழ்கண்ட தலைப்புகளில் தொடக்கநிலை, நடுநிலை உயர்நிலை, மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என மாவட்டத்திற்கு 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
1) உள்கட்டமைப்பு வசதி
2) ஆசிரியர் திறன் மேம்பாடு
3) பயிற்சிகள்
4) மாணவர்களின் பாடவாரிதிறன் மேம்படுத்தல்
5) பாடத்திற்கு ஏற்றவாறு வகுப்பறை செயல்பாடு
6) மேற்பார்வை / கண்காணிப்பு சார்ந்த மேம்பாடு
7) SMC /PTA / VEC மேம்பாடு
8) பாடப்புத்தகமேம்பாடு
9) மதிப்பீடு
10) பொதுவானவை சார்ந்து இன்றைய நிலை குறைபாடுகள், இடர்பாடுகள், எதிர்காலத் தேவை பற்றி என்பதாகும். இதில்
கல்வித்துறை ஆணையாளரிடம் நேரில் நான் தெரிவித்த கருத்துகள்
1) பயிற்சிகள் சார்ந்து பள்ளிக்குள் சக ஆசிரியர்களுடனான இணக்கம் மாற்றுத் துறைகளை பள்ளி வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல் பாலினப்பாகுபாடு குறித்த பயிற்சிகள் தேவை. பயிற்சிகள் கல்விச் செயல்பாடுகளை பள்ளிகளை பாதிக்கக் கூடாது.
2 நாட்களுக்கு மேல் பயிற்சி வேண்டாம். ஆசிரியர்கள் விருப்பம், சுழற்சி அடிப்படையில் அவரவர் விரும்பும் பயிற்சிகளுக்கு அனுப்பலாம்.
2) PTA/smc முறையாக தேர்ந்தெடுத்தல், கூட்டுதல், செயல்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.
3) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, இசை, ஓவியம் தனித்திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு ஆசிரியர்கள் தனிப்பாட வேளை வேண்டும்.
4)பள்ளிக் கண்காணிப்பில் BRT முதல் CEO வரை அதிகாரம் செலுத்துபவராக குற்றம் சுமத்துபவராக இல்லாமல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பள்ளி / கற்பித்தல் / மாணவர்கள் / ஆசிரியர்கள் சார்ந்து மேம்படுத்த ஆலோசனை வழங்கி செயல்படுத்த , அணுகு முறையில் மாற்றம் தேவை.
5) ஆசிரியர்களை கல்வி சாராத பணி களில் ஈடுபடுத்தக்கூடாது.
6) தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் வாசிப்புப் பயிற்சிமேம்பட நூலகப் பயன்பாடு, வாசிப்பு முகாம் மாதம் 1 முறை நடத்தப்பட வேண்டும்.
7) குழந்தைகளுக்கான மாத / வார இதழ்கள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் -
8) ரெட் கிராஸ் / ஸ்கவுட் போன்ற அமைப்புகள் ஏற்படுத்த பட்டு சிறப்பாக செயல்பட நடவடிக்கை வேண்டும்.
9) 5,8 வகுப்புக்கு பொதுத் தேர்வு வேண்டாம்.
10) அனைத்துப் பள்ளிகளுக்கும் தொலைபேசி இணைப்பு / இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
11) சமூக அறிவியல் அறிவியல் பாடங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.
12) ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏதேனும் ஒரேயொரு வருகைப் பதிவேடு முறை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
என்பதாகும். இறுதியில் அனைத்து ஆசிரியர்களின் கருத்துகளும் கூட்டத்தில் அனைவரின் முன்னிலையிலும் நமது மாவட்டக் கல்வி அலுவலர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. கலந்து கொண்டமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் ஆணையர் அம்மாவும் நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய அய்யணன் அய்யா அவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து ஆணையர் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், திட்ட அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டமானது காலை 11.00 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு மேலும் தொடர்ந்தது. புதிய விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து எல்லோரும் வெளியேறினோம். காத்திருப்போம் நாம் அனைவரும் நல் மாற்றத்திற்கு. அன்புடன்..., N. பழனிக்குமார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.