👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
விருதுநகர் அருகே மீன் தொட்டிக்குள் முழு உடலை அடக்கி, நீண்ட நேரம் யோகாசனம் செய்து 9 வயது மாணவி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். விருதுநகர் அருகே சூலக்கரையை சேர்ந்த கோவிந்தராஜ் - பார்வதி தம்பதியின் இளைய மகள் முஜிதா (9). இவர் செவல்பட்டியில் உள்ள தாமு மெட்ரிக் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக யோகாசன பயிற்சி செய்து வரும் முஜிதா, கடந்த ஆண்டு கண்ட பெருண்டாசனத்தில் கால்கள் மூலம் முட்டைகளை ஒவ்வொன்றாக கிண்ணத்தில் எடுத்து வைக்கும் சாதனை நிகழச்சியில் 10 முட்டைகளை 47 வினாடிகளில் எடுத்து வைத்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், இந்தப் பள்ளியில் உலக சாதனை யோகா நிகழ்ச்சி, நோபிள் கல்விக்குழும இயக்குநர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், நோபிள் மெட்ரிக் பள்ளி முதல்வர் டாக்டர் வெர்ஜின் இனிகோ முன்னிலையில் ேநற்று நடைபெற்றது. இதில், இரண்டாவது சாதனையாக ஒரு அடி உயரம், 17 இன்ச் அகலம் உடைய மீன் தொட்டிக்குள், முஜிதா கண்ட பெருண்டாசனம் செய்து முழு உடலையும் அடக்கிய நிலையில் 8 நிமிடங்கள் 2 வினாடி இருந்து புதிய உலக சாதனை நிகழ்த்தினார். இந்த புதிய உலக சாதனை ‘நோபிள் வேர்ல்டு ரெக்கார்டு’ புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, சீனாவை சேர்ந்தவர் மூன்று நிமிடங்கள் இதை விட பெரிய மீன் தொட்டியில் இருந்தது இதுவரை சாதனையாக இருந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.