வட்டார வள மைய அலுவலகத்தில் ஆதார் மையங்களை அமைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 07, 2019

Comments:0

வட்டார வள மைய அலுவலகத்தில் ஆதார் மையங்களை அமைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாநிலத்தில் உள்ள 385 ஒன்றியங்களில் (நகர்புற ஒன்றியங்கள் நீங்கலாக) ஒன்றியத்திற்கு இரண்டு ஆதார் பதிவு மையங்கள் வீதம் நிறுவப்பட வேண்டும். தற்போது 265 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையங்களில் (ஒன்றியத்திற்கு ஒன்று வீதம்) சம்பந்தப்பட்ட வட்டார வள மைய அலுவலக வளாகத்தில் ஆதார் எண் பதிவு மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு நடைபெற்று வருகிறது.
120 ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு இரண்டு வீதம் மற்றும் 265 ஒன்றியங்களில் இரண்டாவது இடத்தில் ஒன்று வீதம், ஆகமொத்தம் 505 ஆதார் பதிவு மையங்கள் நிறுவப்பட வேண்டும் 505 ஆதார் பதிவு மையங்களை இயக்குவதற்கு தகுந்த கணினி விவர பதிவாளர் கள் இல்லாததால் இப்பணியை தமிழ்நாடுமின்னணு நிறுவனத்திற்கு (ELCOT) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 385 ஒன்றியங்களில் 505 இடங்களில் பதிவு மையங்கள் நிறுவுவதற்கு ஏதுவாக 505 ஆதார் பதிவு கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் நிறுவப்படும் ஆதார் பதிவு மையத்திற்காக ஒதுக்கப்படும் அறைகள் தகுந்த பாதுகாப்பு வசதியுடன் உள்ளதை உறுதிபடுத்த, வேண்டும். மேற்படி அறை சம்பந்தப்பட்ட பள்ளியின் உட்புறமாகவும் பள்ளியின் முகப்பிலும் அமைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்
மாவட்டங்களில் நடைபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். 265 ஒன்றியங்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மைய அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் (பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி (non-mandatory) ஆதார் பதிவிற்கு பெறப்படும் ரூ.50/- சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்தும் விதமாக வட்டார வள மைய UDISE ஒருங்கிணைப்பாளரின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் பாதுகாப்பில் உள்ள ஆதார் பதிவு கருவிகள், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் அலுவலக பிரதிநிதியிடம் முறையாக ஒப்படைக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி கருவிகளை ஒப்படைக்கும் அலுவலக பிரதிநிதியின் அலுவலக அடையாள அட்டையின் நகல் ஒப்புகையுடன் முழு விவரம்பெறப்பட வேண்டும்.
எனவே, மேற்படி பணிகளை உடனடியாக செய்து முடிக்கும் விதமாக துரித நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்கள் கடிதம் வெளியிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews