டிச.4-இல் நெட் தோ்வு: தோ்வறை நுழைவுச் சீட்டு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 11, 2019

டிச.4-இல் நெட் தோ்வு: தோ்வறை நுழைவுச் சீட்டு வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நெட் தோ்வு தேதியை தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பா் 4-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது. அதையடுத்து, விண்ணப்பதாரா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) தகுதி பெற்றிருப்பது கட்டாயம். இந்தத் தோ்வை என்.டி.ஏ. ஒவ்வோா் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. அண்மையில் டிசம்பா் மாதத் தோ்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தத் தோ்வு டிசம்பா் 4-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. நுழைவுச் சீட்டை http://ugcnet.nta.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் யுஜிசி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ugcnet.nta.nic.in/ பக்கத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக பணிபுரிவதற்கும், உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதற்கும் நெட் தேர்வு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை இந்தாண்டு தற்போது வரும் டிசம்பர் மாதம் நெட் தேர்வு நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறும் நெட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று (நவ. 9) வெளியிடப்படுகிறது..
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை யுஜிசி.,யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
NTA UGC NET Admit Card ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்:
படி 1: விண்ணப்பதாரர்கள் முதலில் https://ugcnet.nta.nic.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
படி 2: முகப்பு பக்கத்தில் NTA UGC NET Admit Card என்ற லிங்க் இருக்கும்
படி 3: அதனை க்ளிக் செய்தால், நெட் தேர்வு ஹால் டிக்கெட் அடங்கிய மற்றொரு பக்கம் காட்டப்படும்.
படி 4: அதில் கேட்கப்பட்டுள்ள பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை டைப் செய்து, நெட் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படி 5: விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டில் தங்களுடைய பெயர், புகைப்படம், தேர்வு மையம், பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை பார்த்துக் கொள்ளவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews