ஊராட்சி செயலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 09, 2019

ஊராட்சி செயலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாமக்கல் மாவட்டத்தில், 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்டம்: நாமக்கல்
மொத்த காலியிடங்கள்: 16
பணி: கிராம ஊராட்சி செயலா்
வயதுவரம்பு: 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 35 வயதிற்கு மேற்படாதவரகவும் இருத்தல் வேண்டும்.
தகுதி: 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிப்போர், ஊராட்சி செயலா் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்கள் அந்த கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்த கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியை சார்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில், 16 கிராம ஊராட்சி செயலா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதனை நிரப்ப அந்தந்த கிராம ஊராட்சியின் தனி அலுவலா்களான வட்டார வளா்ச்சி அலுவலா்கள்(கிராம ஊராட்சிகள்) முலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இன சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விபரங்கள் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய (www.ncs.gov.in) இணையதளத்திலும், நாமக்கல் மாவட்ட (https://namakkal.nic.in) இணையதளத்திலும் மற்றும் அந்தந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் வெளியிடப் பட்டுள்ளன.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய அத்தாட்சி செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ. பதிவு அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.11.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2019/11/2019110937.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews