உயர் கல்வியில் தமிழகம் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 11, 2019

உயர் கல்வியில் தமிழகம் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
இந்திய அளவில் தமிழகம் உயர்கல்வியில் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று மணமக்கள் ஏ.சசிமோகன்-எம்.பூர்ணிமா ஆகியோரை வாழ்த்திப் பேசியது: தமிழக உயர் கல்வித் துறையில் சிறந்த நிர்வாகம் காரணமாக இந்தியாவிலேயே தமிழகம் உயர்கல்வி பயில்வோரின் சதவிகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வியில் ஒரு சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது. ஒரு மைல்கல். அண்மையில், தருமபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி) சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. இதற்காக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கடுமையாக உழைத்தார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றியால், தருமபுரி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இது ஒரு மக்கள் இயக்கம் என நிரூபிக்கப்பட்டுளளது என்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், பி.தங்கமணி, கே.சி.வீரமணி, ஆர்.பி.உதயகுமார், கருப்பணன், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், சட்டப் பேரவைத் தலைவர் தனபால், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வைகைச்செல்வன், கோகுல இந்திரா, கே.பி.முனுசாமி, பி.பாலகிருஷ்ணா ரெட்டி, மோகன், தாமோதரன், வ.முல்லைவேந்தன், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews