தொல்லியல் அலுவலர் பதவிக்கு விரைவில் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 17, 2019

தொல்லியல் அலுவலர் பதவிக்கு விரைவில் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தமிழக தொல்லியல் துறையில் காலியாக உள்ள, தொல்லியல் அலுவலர் பதவிக்கு, விரைவில் தேர்வு நடத்தப்படும்' என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக தொல்லியல் துறை, கள ஆய்வு செய்வது, அகழாய்வு செய்வது, புராதன சின்னங்களை பாதுகாப்பது, தொல்லியல் சார்ந்த கட்டுரைகளை தொகுத்து பதிப்பிப்பது உள்ளிட்ட பணிகளை செய்கிறது. இதற்கு, அடிப்படை தேவையான, தொல்லியல்அலுவலர் பதவியில், 15க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால், பணிகள் சுணக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக தொல்லியல் துறையில், காலி பணியிடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் வலியுறுத்தியுள்ளோம்.'விரைவில், தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக, அது தெரிவித்துள்ளது. எனவே, இந்தாண்டுக்குள், தொல்லியல் அலுவலர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும்' என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews