ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 26ல் நடக்கிறது தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 17, 2019

ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 26ல் நடக்கிறது தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இளநிலை, முதுநிலை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஹிந்தி பேராசிரியர்களுக்கான தேர்வு, வரும், 26ல் நடக்கிறது. இது குறித்து, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய, தென் மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு ஆண்டுக்கான, இளநிலை ஹிந்தி மொழி பெயர்ப்பாளர், முதுநிலை ஹிந்தி மொழி பெயர்ப்பாளர், ஹிந்தி பேராசிரியர் பணியிடங்களுக்கு, கணினி அடிப்படையில், தேர்வு நடத்தப்பட உள்ளது. தென் மண்டலத்தில், 5,135 பேர், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். சென்னை, விஜயவாடா, ஐதராபாத் ஆகிய மூன்று நகரங்களில், எட்டு மையங்களில், 26ம் தேதி, காலை, 10:00 முதல், பகல், 12:00 மணி வரை தேர்வு நடைபெறும்.தேர்வு நடைபெறுவதற்கு, நான்கு நாட்களுக்கு முன், மின்னணு நுழைவுச் சான்றிதழ்களை, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களில் குறிப்பிடப்படும், 'இ - மெயில்' முகவரி அல்லது தொலைபேசிக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக விபரங்கள் அனுப்பப்படும்.மேலும் விபரங்களை, 044 - -2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 95946 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews