ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 17, 2019

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், டிசம்பர், 5ல், சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்து, துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி சுஜித்குமார் சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, மத்திய அரசின் தேசிய வாழ்க்கை தொழில் சேவை மையம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து, இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாமை, டிசம்பர், 5ம் தேதி நடத்துகிறது.ஆண்களுக்கு, இயந்திரங்களை கையாளுதல் மற்றும் பரமாரித்தல் பிரிவில், 'டெக்னீசியன்' பணியிலும், பெண்களுக்கு, 'இன்வென்டரி கிளார்க்' பணியிலும் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும், 28 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, சென்னை - ஒரகடம், கும்மிடிப்பூண்டி மற்றும் ஸ்ரீசிட்டி ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி முகாம்களில், 90 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் போது, உணவு, தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும். ஐ.டி.ஐ., டிப்ளமாவில், மெக்கானிக்கல், இ.இ.இ., ஆட்டோமொபைல், தயாரிப்பு படிப்பு படித்தவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அசல் மாற்றுச் சான்றிதழுடன் வர வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, மத்திய அரசின் தேசிய வாழ்க்கை தொழில் சேவை மையம், சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - 4 என்ற முகவரிக்கு, டிச., 5ம் தேதி காலை, 9:30 மணிக்கு, நேரில் வர வேண்டும்.மேலும் விபரங்களை, 044 - -2461 5112 என்ற, தொலைபேசி எண், 97911 77766 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews