Search This Blog
Thursday, November 28, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்லைக்கழகத்தில் துணை வேந்தர், பதிவாளர் இல்லாத காலகட்டத்தில் சுமார் 500 கல்லூரிகளுக்கு உரிமத்தை புதுப்பித்து வழங்கி முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரியின் துணை வேந்தராக இருந்த தங்கசாமியின் பதவிக் காலம் கடந்த பிப்ரவரியுடன் முடிந்து விட்டது. 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம்தான் புதிய துணை வேந்தராக பஞ்சநாதம் நியமிக்கப்பட்டார். இந்த பல்லைக்கழகத்தின் பதிவாளராக இருந்தவரும் ஓய்வு பெற்றார். இதனால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த பாலகிருஷ்ணன், பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை வேந்தர் பொறுப்பை உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா கூடுதலாக கவனித்து வந்தார். செயலாளர் தலைமைச் செயலகத்தில் உள்ளதால், பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பாலகிருஷ்ணனே முழு பொறுப்பையும் நிர்வாகம் செய்து வந்தார்.
மேலும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 700க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உரிமம் பெற்றிருந்தாலும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
இதற்காக அவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்வார்கள். அந்த விண்ணப்பத்தை வைத்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், சம்பந்தப்பட்ட கல்லூரிக்குச் சென்று ஆய்வு நடத்துவார். அவ்வாறு ஆய்வுக்குச் செல்லும் பல பேராசிரியர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்து சிறப்பாக கவனித்தால்தான் அறிக்கைகளை சாதகமாக கொடுப்பார்கள். வழக்கமாக துணை வேந்தரும் இல்லாமல், பதிவாளரும் இல்லாமல் பொறுப்பு பதிவாளர் இருக்கும் காலங்களில் உரிமம் புதுப்பித்து வழங்குவதில்லையாம். ஆனால் தற்போது 500க்கும் மேற்பட்ட உரிமங்கள் பணம் வாங்கிக் கொண்டு புதுப்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் தலைமைச் செயலக அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ தெரியாமல் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை வேந்தர், இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தினால் பெரிய அளவில் முறைகேடுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தவிர, இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் முனைவர் பட்டத்துக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களை சேர்க்கவும், பட்டங்களை வழங்கவும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2 லட்சம் வரை லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைத்தவிர நிர்வாகத்திலும் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிதாக வந்திருக்கும் துணை வேந்தர், இந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அமைச்சர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
துணை வேந்தர், பேராசிரியர்கள் இறக்குமதி
தமிழ்நாடு கல்வியியல் பல்லைக்கழகத்தில் முன்பு துணை வேந்தராக இருந்த விஸ்வநாதன், அண்ணாமலை பல்கலை கழகத்தில் பணியாற்றியவர். தற்போது துணை வேந்தராக நியமிக்கப்பட்டவரும் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். அதேபோல, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்திய பிறகு அங்கு முறைகேடாக நியமிக்கப்பட்டதாவும், அதிகமானவர்கள் நியமிக்கப்பட்டதாகவும் கூறி பலர் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பலரும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பதவியில் நியமிக்கப்படாமல், அதைவிட உயர் பதவியில் நியமிக்கப்படுவாதகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதவி பேராசிரியர்களாக இருப்பவர்களுக்கு நேரடியாக பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பலரும் 3 பதவி உயர்வில் வந்துள்ளனர். தற்போது பதிவாளராக உள்ள பாலகிருஷ்ணனும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருந்துதான், தற்போது பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதும், அதேபோல பலரையும் சீனியாரிட்டி இல்லாமல், பதவி உயர்வில் பேராசிரியர்களாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும், இதற்காக பெரிய அளவில் பண பேரம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
B.Ed/M.Ed
Colleges
CORRUPTIONS
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் 500 கல்லூரிகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்கியதில் முறைகேடு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் 500 கல்லூரிகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்கியதில் முறைகேடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.