ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 98 சதவீதம் பேர், 'பெயில்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 02, 2019

Comments:0

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 98 சதவீதம் பேர், 'பெயில்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக பள்ளி கல்வியின், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கான தேர்வில், 98 சதவீதம் பேர், 'பெயில்' ஆகியுள்ளனர். அதனால், பேராசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ், 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்விக்கான பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், இரண்டு ஆண்டு, டி.எல்.எட்., எனப்படும், ஆசிரியர் பயிற்சி படிப்புகள் நடத்தப் படுகின்றன.பிளஸ் 2 முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பை படிக்கலாம். இதை முடித்தால், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேரலாம். 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆசிரியர் பயிற்சி படிப்பில், லட்சக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்தனர். சமீபகாலமாக, இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டில், 4,000 பேர் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்தனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரசு தேர்வுத்துறை நடத்திய இந்த தேர்வை, 4,000 பேர் எழுதியதில், 2.5 சதவீதமான, 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த விபரங்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சராசரியாக, ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு, ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அளவுக்கு, நிலைமை மோசமாக உள்ளது. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மட்டும், ஒன்பது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், அரசின் நிதி உதவி பெறும், 29 நிறுவனங்களும் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றும், நிரந்தர பேராசிரியர்களுக்கு செலவிடும் நிதி அளவுக்கு கூட, மாணவர்கள் தேர்ச்சி பெறாதது ஏன் என, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை நடத்தும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய 4,503 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக ஆரம்பப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் 12 அரசு, 29 அரசு நிதியுதவி மற்றும் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக் கான தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜூன் மாதம் அரசு தேர்வுத்துறையால் நடத்தப் பட்டது. இதற்கான தேர்வு முடிவு கள் நேற்று முன்தினம் வெளி யானது. அதில் மிகவும்குறைந்தளவில் 2.4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற் றுள்ளனர்.
அதன்படி தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வை முதலாமாண்டு மாணவர்கள் 3,000 பேர் எழுதினர். அதில் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்கள் 4,503 பேர் தேர்வெழுதினர்.அதில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று பெற தகுதி பெற்றுள்ளனர். விடைத்தாள் திருத்தம் உட்பட தேர்வு முறைகளில் பின்பற்றப் படும் சமீபத்திய கடும் கட்டுப் பாடுகளால் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews