Breaking

Tuesday, November 05, 2019

சாலை விபத்தில் இறந்த மாணவனின் பெற்றோருக்கு 18.45 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவனின் தாய்க்கு 18 லட்சத்து 45 ஆயிரம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் தீபக் மரிய ஜோசப். இவர், தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு, மாதவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியே தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தீபக்கின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தீபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, தீபக்கின் தாய் ஆரோக்கிய ஸ்டெல்லா சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி உமா மகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தீபக் பள்ளி முடித்து, அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்ததும், அவருக்கு 17 வயது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நீதிபதி தீபக்கின் இறப்பு அவரது தாய்க்கு பெரும் இழப்பாகும். எனவே அவரது தாய்க்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ₹18 லட்சத்து 45 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog