கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இதுவரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஒவ்வொரு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தனித்தனியாக ஒருசில பாடங்களுக்கு மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தி வரும் நிலையில் இனி நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர பாடவாரியாக ஒற்றை நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாபட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத அவசியம் இல்லை என்றும் இந்த புதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி கல்லூரி நிர்வாகத்திற்கும் எளிதாக இருக்கும் என்றும் மத்திய மனிதவள மேம்பாபட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். ஆனால் நீட் தேர்வை போலவே இந்த நுழைவுத்தேர்வையும் அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது கல்லுாரி மாணவர்களின், கற்றல் திறனை பரிசோதிக்கும் தேர்வுகளை நடத்த, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களின், கற்றல் திறனை உயர்த்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல இடங்களில், கல்லுாரி மாணவர்களில், குறிப்பிட்ட சதவீதத்தினர், ஒழுங்காக கல்லுாரிக்கு வருவதில்லை. சில இடங்களில், ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துவது இல்லை. அதனால், மாணவர்களிடம் கற்றல் குறைபாடு உள்ளதாகவும், பள்ளிகளை விட கல்லுாரிகளில், 'அரியர்' வைக்கும் மாணவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மத்திய அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, திறனறி சோதனைகளை நடத்த, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.இந்தத் தேர்வு குறித்த நடைமுறைகளையும், பாடத்திட்டத்தையும், யு.ஜி.சி., உருவாக்கியுள்ளது. இதுகுறித்து, மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், வரும், 31க்குள், தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews