இந்த டெபிட் கார்டு இ.எம்.ஐ மூலமாக பொருட்களை வாங்கிய 1 மாதத்துக்கு பிறகு உங்களது இ.எம்.ஐ ஆரம்பிக்கும் என்றும், உங்களது வங்கி கணக்கில் முறையான நிதி இருப்பு மற்றும் பணபரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த கார்டினை பெற நீங்கள் எந்த ஆவணமும் தரவேண்டியதில்லை என்றும், நீங்கள் எந்த வங்கிக் கிளையையும் அணுக வேண்டியது இல்லை என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது.
இ.எம்.ஐ டெபிட் கார்டுகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை?
இந்த இ.எம்.ஐ கார்டுகளை பெற எந்த வித கட்டணமும் கிடையாது. குறிப்பாக செயல்பாட்டுக் கட்டணம் என்று எதுவும் இல்லை. மேலும் டாக்மென்டேஷன் கட்டணமும் இல்லை. இது எந்த வித கட்டணமும் செலுத்தாமல் நாம் பொருட்களை வாங்க இந்த கார்டுகள் ஏதுவாக அமையும் என்றும், இது பேப்பர்லெஸ் கடன்களாக இருக்கும் என்றும், எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.
இந்த இ.எம்.ஐ கார்டாக அறிமுகப்படுத்தப்படும் இந்த டெபிட் கார்டை வைத்து, குறைந்த பட்சம் 6 மாதம் முதல், 18 மாதம் வரை தவணைகளைக் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இதற்காக தனியாக வங்கியை தொடர்பு கொள்ள தேவையில்லை என்றும், பொருட்களை தேர்வு செய்யும் போது ஜீரோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்சனை க்ளிக் செய்தால் போதும், உங்களது பரிவர்த்தனை இதன் மூலம் நடந்து முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
கிரெடிட் ஸ்கோர் வேண்டும்
இந்த கார்டுகளை பெற வங்கிக் கணக்கில் நல்ல பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும், மேலும் உங்களது கிரெடிட் ஸ்கோர் தேவையான அளவு இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. எஸ்.பி.ஐ அக்கவுண்ட் கோல்டர்ஸ் நீங்கள் இதற்கு தகுதியானவர் தான என்பதை தெரிந்து கொள்ள DCEMI என டைப் செய்து, 567676 என்ற எண்ணிற்கு, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய வங்கி
சொத்துக்கள், வைப்புத் தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை பொறுத்தவரை, எஸ்.பி.ஐ இந்தியாவில் மிகப்பெரிய வணிக வங்கியாகும். இது இந்தியாவில் 22,088 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியாக செயல்பட்டு வரும் இவ்வங்கி, அவ்வப்போது பற்பல சலுகைகளை வழங்கி வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இம்முறை பண்டிகை காலத்துக்கு முன்னதாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு இது தான் தீபாவளி போனஸ் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.