உதவிப் பேராசிரியர் பணிக்கான NET தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 09, 2019

உதவிப் பேராசிரியர் பணிக்கான NET தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய அளவிலான தகுதித் தோ்வுக்கு (நெட்) விண்ணப்பிக்க புதன்கிழமை (அக். 9) கடைசி நாளாகும். கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) தோ்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். இந்தத் தோ்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான நெட் தோ்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தோ்வு எப்போது?: இந்தத் தோ்வானது டிசம்பா் 2 முதல் 6-ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது. தோ்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னா் வெளியிடப்படும்.
ஆன்-லைன் முறையிலேயே இந்தத் தோ்வு நடத்தப்படும். தோ்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தோ்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். இந்தத் தோ்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அக்டோபா் 9 கடைசி நாளாகும். தோ்வு முடிவுகள் டிசம்பா் 31-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http‌s://nta.ac.in என்ற இணையதளத்தைப் பாா்த்துத் தெரிந்து கொள்ளலாம். இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) போன்ற பணிகளில் சேர்வதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான யுஜிசி நெட் (UGC NET) டிசம்பர் 2019-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: 1. உதவிப் பேராசிரியர்கள்(Assistant Professor) 2. இளம் ஆராய்ச்சியாளர்கள்(JRF) முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019, இரவு 11.50 மணி வரை ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 10.10.2019, இரவு 11.50 மணி வரை தேர்வு நடைபெறும் தேதிகள்: 02.12.2019 முதல் 06.12.2019 வரை வயது வரம்பு: (01.12.2019 அன்றுக்குள்) 1. இளம் ஆராய்ச்சியாளர் (JRF) என்ற பணிக்கு, அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 2. உதவிப் பேராசிரியர் (AP) என்ற பணிக்கு, அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தேர்வுக்கட்டணம்: 1. பொதுப் பிரிவினர் / Un Reserved - ரூ.1,000 2. EWS / OBC - NCL - ரூ.500 3. SC / ST / PwD / Transgender - ரூ.250 கல்வித்தகுதி: குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பில் 55% தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பு: கல்லூரியில் கடைசி வருடம் பயின்று கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், https://ugcnet.nta.nic.in அல்லது https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx போன்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://ugcnet.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx?i=File&ii=18&iii=Y
பல்கலைகழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் உள்ள, பல்கலை மானிய குழு சார்பில், முதுநிலை பட்டதாரிகளுக்கு, 'நெட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, முதுநிலை பட்டதாரிகள், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பேராசிரியர் பணியில் சேர முடியும்.இந்த தேர்வு, ஆண்டு தோறும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் தேர்வு, டிசம்பரில் நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது; அக்., 9 வரை பதிவு செய்யலாம்.அதேபோல, சி.எஸ்.ஐ.ஆர்., என்ற, மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளவும், உதவி தொகை பெறவும், தனியாக நெட் தேர்வு, டிசம்பரில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கும், நேற்று முதல் ஆன்லைன் பதிவு துவங்கியது; அக்., 9 வரை பதிவு செய்யலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நெட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. இதற்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 9) முதல் விண்ணப்பிக்கலாம். கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. இப்போது டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது டிசம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் நடத்தப்பட உள்ளது.
தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படும். ஆன்-லைன் முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறை கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி: இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாளாகும். தேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews