SBI ATM கார்ட்களுக்கு உச்ச வரம்பு..! எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்கலாம் தெரியுமா..? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 05, 2019

Comments:0

SBI ATM கார்ட்களுக்கு உச்ச வரம்பு..! எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்கலாம் தெரியுமா..?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் மிகப் பெரிய வங்கியான எஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பல வகையான டெபிட் கார்ட்களை (ஏடிஎம் கார்ட்களை) கொடுக்கிறார்கள்.
அதில் ஒவ்வொரு ரக கார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை தான் ஒரே நாளில் எடுக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.
சரி இப்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், எந்த வகையான எஸ்பிஐ டெபிட் கார்ட்களுக்கு, ஏடிஎம்-ல் இருந்து ஒரே நாளில் எவ்வளவு பணத்தை எடுக்க முடியும் எனப் பார்ப்போம்..!
ஏடிஎம் விதிமுறைகள்
ஒவ்வொரு ஏடிஎம் கார்டுக்கும் 8 - 10 முறை வரை எஸ்பிஐ ஏடிஎம் + மற்ற வங்கி ஏடிஎம்-களைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம் எனச் சொல்கிறார்கள். அதற்கு மேல் போகும் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்க இருக்கிறது எஸ்பிஐ. இந்த அக்டோபர் 01, 2019 முதல் கூடுதல் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு வசூலிக்க இருக்கிறார்கள் என்கிற விவரமும் சில தினங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
SBI Classic and Maestro Debit Cards
இந்த எஸ்பிஐ க்ளாசிக் அண்ட் மாஸ்ட்ரோ டெபிட் கார்ட்களைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் (ரொக்கம்) எடுக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார்கள் எஸ்பிஐ தரப்பினர்கள். பொதுவாக இந்த ரக கார்ட்களைத் தான் பெரும்பாலான மக்களுக்கும், வெகு ஜன மக்களுக்கும் கொடுக்கிறார்கள். எனவே இந்த ரக கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணத்தை எடுக்கலாம்.
SBI Global International Debit Card
இந்த எஸ்பிஐ குளோபல் இண்டர்நேஷனல் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒரே நாளில் மொத்தம் 40,000 ரூபாய் வரை ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணம் எடுக்கலாம். இந்த எஸ்பிஐ குளோபல் இண்டர்நேஷனல் டெபிட் கார்டைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நம் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள் எஸ்பிஐ வங்கி தரப்பினர்கள். ஆக சாதாரண க்ளாசிக் கார்டை விட இந்த கணக்கில் இருந்து 20,000 ரூபாய் கூடுதலாக எடுக்கலாம்.
SBI My Card International Debit Card
இந்த எஸ்பிஐ மை கார்ட் இண்டர்நேஷனல் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒரே நாளில் மொத்தம் 40,000 ரூபாய் வரை ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணம் எடுக்கலாம். இந்த எஸ்பிஐ மை கார்ட் இண்டர்நேஷனல் டெபிட் கார்டைப் பயன்படுத்தி இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலகம் முழுக்க எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் எஸ்பிஐ தரப்பினர்கள். சாதாரண க்ளாசிக் கார்டை விட இந்த கார்ட் மூலம் நம் வங்கிக் கணக்கில் இருந்து 20,000 ரூபாய் கூடுதலாக எடுக்கலாம்.
sbiINTOUCH Tap & Go Debit Card
இந்த எஸ்பிஐ இன் டச் டேப் & கோ டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒரே நாளில் மொத்தம் 40,000 ரூபாய் வரை ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணம் எடுக்கலாம். இது பல கூடுதல் வசதிகளைக் கொண்ட கார்ட். இந்த கார்டையும் சர்வதேச அளவில் எந்த நாடுகளில் வேண்டுமானாலும் பணத்தை எடுக்க முடியும் என்கிறார்கள். இதில் தான் புதிய என் எஃப் சி (NFC - Near Field Communication) வசதிகளும் இருக்கிறதாம்.
SBI Mumbai Metro Combo Card
இந்த எஸ்பிஐ மும்பை மெட்ரோ காம்போ கார்ட் பயன்படுத்தி ஒரே நாளில் மொத்தம் 40,000 ரூபாய் வரை ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணம் எடுக்கலாம். இந்த டெபிட் கார்டே மும்பை மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்த ஆக்ஸிஸ் கார்டாகவும் பயன்படுத்த முடியும் என்பது தான் இதில் உள்ள பெரிய நன்மை. மற்றபடி வழக்கம் போல ஒரு டெபிட் கார்டில் என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த கார்டிலும் செய்யலாம்.
மற்ற கார்டுகள்
SBI Silver International Debit Card - நாள் ஒன்றுக்கு 40,000 ரூபாய்
SBI My Card International Debit Card - நாள் ஒன்றுக்கு 40,000 ரூபாய்
SBI Gold International Debit Card - நாள் ஒன்றுக்கு 50,000 ரூபாய்
SBI Platinum International Debit Card - நாள் ஒன்றுக்கு 1,00,000 ரூபாய்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews