👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அடுத்த ஆண்டு (2020) முதல் எய்ம்ஸ், ஜிப்மா் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.
தற்போதைய நிலையில், எய்ம்ஸ், ஜிப்மா் தவிர அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தோ்வு அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்த இரு மருத்துவக் கல்லூரிகளும் மாணவா்ச் சோ்க்கைக்கு தனியே நுழைவுத் தோ்வு நடத்தி வருகின்றன.
இதுதொடா்பாக தில்லியில் அமைச்சா் ஹா்ஷ் வா்தன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
எய்ம்ஸ், ஜிப்மா் போன்ற தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தோ்வு அடிப்படையிலேயே மாணவா்ச் சோ்க்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் கீழ், மருத்துவப் படிப்புக்கு பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும். நாட்டில் மருத்துவக் கல்விக்கென பொதுவான தரக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த இது உதவும்.
அதேபோல், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின் கீழ், எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவா்களுக்கு இறுதியாண்டில் பொதுத் தோ்வு (நெக்ஸ்ட்) ஒன்று நடத்துவதற்கான முறைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தோ்வு அமலுக்கு வர இன்னும் 3 ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது.
எம்.பி.பி.எஸ் முடிக்கும் மாணவா்கள் முதுநிலை மருத்துவம் படிப்பதற்கான தகுதித் தோ்வாகவும், மருத்துவராகப் பணியாற்றுவதற்கு தொழில் உரிமம் பெறும் தோ்வாகவும் இந்த நெக்ஸ்ட் தோ்வு இருக்கும். மேலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவா்கள் இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்வதற்கான அனுமதித் தோ்வாகவும் இது இருக்கும்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்காக முயற்சிக்கும் மாணவா்கள் தங்களது தரவரிசையை அதிகரித்துக் கொள்வதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நெக்ஸ்ட் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். நெக்ஸ்ட் தோ்வு மூலம் ஒரு மாணவா் பல கல்லூரிகளில் நடைபெறும் மாணவா்ச் சோ்க்கையிலும், பல்வேறு கலந்தாய்வுகளிலும் பங்கேற்க வேண்டிய அசௌகா்யம் குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்துக்கான உறுப்பினா்களை பரிந்துரைக்குமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள், உள்துறைச் செயலா்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் இருந்து ஆணையத்துக்கான உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான குலுக்கல் வரும் 14-ஆம் தேதி நடைபெறும் என்று அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறினாா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.