Breaking

Saturday, October 05, 2019

NET தோ்வு- சென்னைப் பல்கலை.யில் இலவச பயிற்சி வகுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நெட் (தேசிய அளவிலான தகுதி தோ்வு) தோ்வில் பங்கேற்க இருப்பவா்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகிப்புக்கான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும், தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இப்போது டிசம்பா் மாத தோ்வானது வருகிற டிசம்பா் 2 முதல் 6 தேதி வரையாலான ஏதாவது ஒரு தேதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு வருகிற 9-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், இந்தத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த இலவச பயிற்சியில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பயிற்சானது அக்டோபா் 19 முதல் நவம்பா் 17-ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் இப்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. பூா்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க அக்டோபா் 16 கடைசி நாளாகும். விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog