👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமா பட்டதாரிகளுக்கு, மத்திய தொழில் பழகுனர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து, 'அப்ரென்டிஸ்' பயிற்சி வழங்க, மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில், தொழில்நுட்பம், கணக்கு உள்ளிட்ட பிரிவுகளில், பல ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். சென்னை, தரமணியில் உள்ள, மத்திய தொழில் பழகுனர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து, மின்வாரியம், இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமா பட்டதாரிகளுக்கு, அப்ரென்டிஸ் என்ற, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கிறது.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், மின் வினியோக பிரிவுகளில், ஓராண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். மின் வாரியத்தில், ஊழியர்கள் தேர்வின் போது, தொழில் பழகுனர் பயிற்சி முடித்தவர்கள், நேரடியாக நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டனர்.
ஆனால், இந்த முறையிலான, ஊழியர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்தன. மேலும், தற்போது, எழுத்து தேர்வு வாயிலாக மட்டுமே ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால், சில ஆண்டுகளாக, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மீண்டும், தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து, தலா, 250 இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
கல்வி மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்பட உள்ள, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, மாதம், 9,000 ரூபாயும்; டிப்ளமோ பட்டதாரிகளுக்கு, 8,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. இதற்கான தேர்வு முறை உள்ளிட்ட விபரங்களை, சில தினங்களில், வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.